27.07.2012.ஒபாமா
தம்பதியர் காய்கறி மற்றும் பழங்களை அதிகம் விரும்பி சாப்பிடுவர். ஆனால் ஒபாமாவுக்கு
பீட்ரூட் மட்டும் பிடிக்காது என அவரது முன்னாள் சமையல் கலைஞர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உலகத் தலைவர்களுக்கு சமைக்கும் சமையல்
கலைஞர்களின் மூன்று நாள் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்ற ஒவ்வொரு சமையல் கலைஞரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அரசியலுக்கு வருவதற்கு முன் கே.ஜி.பி எனப்படும் ரஷ்ய புலனாய்வுத் துறை அதிகாரியாக இருந்தவர். எனவே அவர் சாப்பிடுவதற்கு முன், அனைத்து உணவுகளையும் பரிசோதிப்பார் என அவரது முன்னாள் சமையல் கலைஞர் ஜில்லெஸ் பிரகார்டு தெரிவித்துள்ளார். பிரகார்டு மேலும் குறிப்பிடுகையில், அமெரிக்கா ஜனாதிபதியாக ஜார்ஜ் புஷ் இருந்த போதும் அனைத்து உணவுகளும் பரிசோதிக்கப்பட்ட பிறகு சாப்பிடுவார். அவர் லண்டன் பயணம் மேற்கொண்ட போது, எப்.பி.ஐ அதிகாரிகள் பரிசோதித்த பின் தான் உணவுகள் அவருக்கு பரிமாறப்பட்டன என்றார். மேலும், அமெரிக்க வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை பொறுத்தவரை, அவர்கள் நாட்டு உணவைத் தவிர்த்து மற்ற நாட்டு உணவுகள் பரிமாறப்பட்டால் சந்தேகப்படுவார். எனவே மற்ற நாட்டு உணவுகள் கூடுதல் பரிசோதனைக்கு பிறகே அவருக்கு பரிமாறப்படும். பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி பிராங்காய்ஸ் மிட்டரன்டுக்கு, விலை உயர்ந்த காளான் உணவுகள் பிடிக்கும். ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மார்க்கெலுக்கு, பாலாடை கட்டி உணவுகள் அதிகம் சாப்பிடுவார். ஆனால் ஒபாமாவுக்கு பீட்ரூட் என்றால் பிடிக்கவே பிடிக்காது என வி.வி.ஐ.பி சமையல் கலைஞர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். |
வெள்ளி, 27 ஜூலை, 2012
மற்ற நாட்டு உணவுகளை சாப்பிட பயப்படும் ஹிலாரி கிளிண்டன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக