siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 27 ஜூலை, 2012

முகாமில் குடிநீர் பெறுவதில் வாய்த் தர்க்கம் :நால்வருக்கும் விளக்க மறியல்

முகாமில் குடிநீர் பெறுவதில் வாய்த் தர்க்கம் :நால்வருக்கும் விளக்க மறியல் _
27.07.2012.சபாபதிப்பிள்ளை முகாமில் கடந்த வாரம் இரு குழுவினருக்கு இடையே குடிநீர் பெறுவது சம்பந்தமாக இடம் பெற்ற வாய்த் தர்க்கம் கோடரி; வெட்டில் முடிவடைந்த நிலையில் குறிப்பி;ட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் நான்கு பேர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நால்வரையும் விளக்க மறியலில் வைக்கும் படி நீதிமன்றத்தினால் பணிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் இருந்து மீளத் திரும்பிய குடும்பங்களுக்கும் ஏற்கனவே முகாமில் வசித்தவர்களுக்கும் இடையே மோட்டர் பூட்டி நீர் பெறுவது சம்பந்தமாக எழுந்த சண்டை இறுதியில் கோடரி வெட்டில் முடிவடைந்தமை குறிப்பி;டத்தக்கதாகும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே விளக்க மறியலில் வைக்கப்பட்டவர்களாவர்

0 comments:

கருத்துரையிடுக