| ||||||||
குறித்த சிறைச்சாலையில் 4 கத்தோலிக்க கைதிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி மற்றும் மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆகியோர் இன்று பகல் மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வவுனியா சிறைச்சாலையிலிருந்து இடமாற்றப்பட்ட தமிழ்க் கைதிகளை பார்வையிடச் சென்றனர். இதன்போது மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுக்கு குறித்த கைதிகளைப் பார்க்க அனுமதி வழங்க முடியாது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்ததைத் தொடர்ந்து டாக்டர் ஜயலத் ஜயவர்தன மாத்திரம் குறித்த கைதிகளை சென்று சந்தித்தார். சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் இந்த நடவடிக்கையானது இலங்கை அரசியலமைப்புக்கு முரணானது என டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி தெரிவிக்கின்றார். இதனைத் தொடர்ந்து வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்து, ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழ்க் கைதிகளை மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியி;ன் பிரதி;ப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி. ஆகியோர் நேரில் சென்று சந்தித்துள்ளனர். இதன்போது அவர்களின் நிலைமை மற்றும் துக்கங்களைக் கேட்டறிந்துகொண்டனர் |
வெள்ளி, 27 ஜூலை, 2012
தமிழ்க் கைதிகளை சந்திக்க மன்னார் ஆயருக்கு மறுப்பு: டாக்டர் ஜயலத் அறிக்கை _
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக