27.07.2012.ரஷ்யாவில் காட்டுப் பகுதியில்
248 சிசுக்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவின் உரல்ஸ் பகுதியை ஒட்டியுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் சந்தேகப்படும்
வகையில் சில பேரல்கள் கிடப்பது தெரியவந்தது. அவற்றை ஆராய்ந்ததில், இறந்த சிசுக்களின் உடல்கள் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மொத்தம் 248 சிசு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு சில சிசுக்கள் 6 இஞ்ச் நீளம் மட்டுமே உள்ளன. சட்ட விரோதமான கருக்கலைப்பு, இறந்து பிறந்த குழந்தைகளின் உடல்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிசுக்களின் உடல்கள் மருத்துவ கழிவாக கருதப்பட்டு உரிய முறையில் அப்புறப்படுத்தப்பட வேண்டும். ஆனால் பேரல்களில் அடைத்து காட்டுப் பகுதியில் வீசியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. |
முகப்பு |
0 comments:
கருத்துரையிடுக