siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 27 ஜூலை, 2012

சிறப்பான பந்து வீச்சை மேற்கொண்டு வெற்றிபெற முயற்சிப்போம்: மெத்தியூஸ்

27.07.2012.இந்தியாவுக்கு எதிரான நாளைய போட்டியிலும் சிறப்பான பந்து வீச்சை மேற்கொண்டு வெற்றிபெற முயற்சிப்போம் என இலங்கை அணியின் துனைத் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி நாளை கொழும்பு கெத்தாராம மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இப்போட்டி குறித்து தெரிவிக்கும் போதே மெத்தியூஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை அணி தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு பலமான நிலையில் உள்ளது. மேலும் கடந்த போட்டியில் நாம் சிறப்பாக விளையாடியிருந்தோம். ஆகவே பெரும்பாலும் நாளை விளையாட உள்ள இலங்கை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படாது.

கடந்த போட்டியில் இசுரு உதான சற்று பதற்றமாகவே விளையாடினார். அவருக்கு இன்னமும் தன்னம்பிக்கை வேண்டும். மேலும் காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்ட நுவான் குலசேகர சுகமடைந்திருந்தால் அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார். கடந்த போட்டியில் நாம் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்தோம். நாளைய போட்டியிலும் பந்து சிறப்பான ஒரு பந்து வீச்சை மேற்கொள்வோம்.

நாளைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கிமான ஒன்று என்பதால் போட்டியில் இந்திய அணிக்கு சிறந்த சவாலை கொடுத்து வெற்றி பெற முயற்சிப்போம் என தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக