siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 27 ஜூலை, 2012

வணிக வளாகங்களில் நடைபெற்ற நூதன திருட்டு அம்பலம்

27.07.2012.மலேசிய வணிக வளாகங்களில், புதுமையான முறையில் பொருட்கள் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் பல்வேறு நகரங்களில் பிரம்மாண்ட வணிக வளாகங்கள் உள்ளன. இங்குள்ள வணிக வளாகங்களில், சமீப காலமாக பொருட்கள் திருடு போயின.
இதையடுத்து, வணிக வளாகங்களில் பாதுகாப்பில் ஈடுபட்டவர்கள் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டனர்.
இந்நிலையில், ஒரு வணிக வளாகத்தில் சந்தேகப்படும் படியாக திரிந்த மூன்று பேரை, வணிக வளாக காவலர்கள் விசாரித்தனர். அவர்களிடமிருந்த பையை சோதித்த போது, 23 ஜோடி கால்சட்டைகள் இருந்தன.
அதுமட்டுமல்லாது மற்ற பைகளை போட்டுவிட்டு, அவர்கள் தப்பி ஓடி விட்டனர். அந்த பைகளை பரிசோதித்த போது, திருடப்பட்ட பொருட்கள் அலுமினிய காகிதத்தால் சுற்றப்பட்டிருந்தன.
பொதுவாக, வணிக வளாகங்களில் பரிசோதிக்கப்படும் மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் விலை பட்டியலை கணக்கிடும் கருவிகள், அலுமினியத் தகடு அல்லது காகிதத்தை பரிசோதிக்க இயலாதவையாக உள்ளன.
இதை பயன்படுத்தி ஒரு கும்பல், வணிக வளாகங்களில் திருடி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வணிக வளாக நிர்வாகத்துக்கும், இது தொடர்பான தகவல் தெரிவிக்கப் பட்டு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

0 comments:

கருத்துரையிடுக