சமுக வலைத்தளத்தில் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக் நிறுனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க்-கின் சொத்து மதிப்பு நாள்தோறும் உயர்ந்து கொண்டே
இருக்கிறது.
ஆனால் இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 25,000 கோடி ரூபாய் அதாவது அமெரிக்கா டாலர் மதிப்பில் சுமார் 3.8 பில்லியன் டாலர்
சம்பாதித்துள்ளார்.எப்படி.?
பேஸ்புக் நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி குறைவாக இருந்தாலும் இந்நிறுவனத்தின் வருவாய் ஈட்டும் திட்டங்கள் மிகப்பெரிய அளவில்
வெற்றி அடைந்துள்ளது.
இதன் ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் பேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் 43 சதவீதம் உயரும் எனக் கணிப்புகள் வெளியானது.
அடித்து நொறுக்கியது..
பேஸ்புக் நிறுவனம் கணிப்புகளை அடித்து நொறுக்கி சுமார் 45 சதவீதம் அளவிலான வருவாய் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது 2015ஆம் ஆண்டை விடவும் குறைவாக இருந்தாலும் 2வது பெரிய வளர்ச்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இக்காலகட்டத்தில் மட்டும் பேஸ்புக் சுமார் 9.16 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது.பங்கு மதிப்பு
பேஸ்புக்-இன் காலாண்டு முடிவு அமெரிக்கப் பங்குச்சந்தையில் மிகப்பெரிய அதிர்வலைகளைப் பெற்றது இதன் காரணமாக, வியாழக்கிழமை வர்த்தகத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 5 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்குக்
கொண்டு சென்றது.
இதன் மூலம் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு வரலாறு காணாத விதமாகச் சுமார் 175.49 ரூபாய் என்ற புதிய உச்சத்தைப் பெற்றது
3.8 பில்லியன் டாலர்
இதன் வாயிலாகப் பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க்-இன் மதிப்பு வியாழக்கிழமை மட்டும் சுமார் 3.8 பில்லியன் டாலர் வரை உயர்ந்தது.
இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 25,000,000,000 ரூபாய்.
50 சதவீத வளர்ச்சி
2017 ஜனவரி மாதத்தில் இருந்து பேஸ்புக் நிறுவனப் பங்குகள் சுமார் 50 சதவீதம் அளவிற்கு உயர்ந்து தற்போது இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 170 பில்லியன் டாலராக உள்ளது.
அதேபோல் ஜூக்கர்பெர்க்-இன் சொத்து மதிப்பும் ஜனவரி மாதத்தில் இருந்து 24 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது..5வது இடம்
இந்தத் திடீர் உயர்வின் மூலம் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் ஸ்லிம் ஹீலு 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஜூக்கர்பெர்க் 72.7 பில்லியன் டாலர் மதிப்புடன் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்
0 comments:
கருத்துரையிடுக