தெற்கு ஜெர்மனியின் ஏ 9 நெடுஞ்சாலையில், ஒரு சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணம் செய்த 18 பேர் இறந்ததாக காவல்துறை கூறுகிறது. வடக்கு பவேரியாவில் உள்ள ஸ்டாம்பாக்கிற்கு அருகில் ஒரு லாரியுடன் இந்த
பஸ் மோதியது. 30 பேர் தீயில் இருந்து தப்பித்தனர், சிலர் மோசமாக காயமடைந்தனர். சாக்சனியில் இருந்து
ஓய்வூதியம் பெறும் ஜெர்மானியர்களை ஏற்றிக்கொண்டு இந்த
பேருந்து சென்றது.
அவசரக் கால மீட்பு பணியாளர்களுக்கு உதவியாக மீட்பு ஹெலிகாப்டர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது பேருந்து கடுமையாக எரிந்துகொண்டிருந்தது. பேருந்து ஏன் விபத்துக்குள்ளானது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அந்த நேரத்தில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்ததாகக் கூறப்படுகிறது. அப்பேருந்தில் 46 பயணிகளும், இரண்டு ஓட்டுநர்களும் இருந்துள்ளனர். விபத்தில் இறந்தவர்களில் ஒரு ஓட்டுநரும்
அடக்கம்.
அவசரகால மீட்புதவியாளர்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது, எரிந்து எலும்புக்கூடான பேருந்தைத்தான் பார்க்க முடிந்தது. விபத்து குறித்து வருத்தப்படுவதாகக் கூறிய சான்சலர் ஏங்கெலா மெர்க்கல்,காயமடைந்தவர்கள் மற்றும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குத் தனது அனுதாபத்தையும் தெரிவித்தார். மோசமான சூழ்நிலையின் போது, மக்களைக் காப்பாற்றிய
மீட்பு பணியாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். பவேரியா உள்துறை அமைச்சர் ஜோச்சிம் ஹெர்மேன் விபத்துக்குள்ளான இடத்திற்கு
வந்துள்ளார்.
ஐந்து மீட்புதவி ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்திருந்தன விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருக்கும் பெய்ராய்த் நகரத்தில், போதுமான மருத்துவ வசதிகள் இருப்பதாக ஜெர்மன் செய்தி தொலைக்காட்சியான என். டி.வியிடம் ஒரு காவல்துறை செய்தி தொடர்பாளர்
கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 comments:
கருத்துரையிடுக