ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
காதிமியா பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் இன்று ஈராக் போலீசார் வழக்கமான சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த தற்கொலைப்படை தீவிரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.
இதில், பொதுமக்கள் தரப்பில் 4 பேர் மற்றும் 6 போலீஸ்காரர்கள் என மொத்தம் 10 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 35 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், ஈராக் மற்றும் சிரியாவில் முக்கிய பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐ.எஸ். அமைப்பே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
0 comments:
கருத்துரையிடுக