siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 8 அக்டோபர், 2015

வான்வழித் தாக்குதல் திருமண நிகழ்வின் போது : 13 பேர் பலி?

யேமனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரில் திருமண நிகழ்வொன்றின் போது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதல் சம்பவமானது, யேமன் தலைநகர் சனாவில் இருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சன்பன் எனும் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலின் பின்னணி தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகாத நிலையில், ஹெளதி கிளர்ச்சியாளர்களை தோற்கடிக்கும் முயற்சியில் சவூதி அரேபியா மற்றும் அதன் வளைகுடா 
அரேபிய நட்பு நாடுகள் கடந்த மார்ச் மாதம் முதல் யேமனில் வான் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும். எனினும் இந்த தாக்குதலை சவூதி தலைமையிலான கூட்டணி மறுத்துள்ளது.
அதேவேளை, தென்-மேற்கு யேமனில் இடம்பெற்ற திருமண வைபவமொன்றின் போது கடந்த செப்டம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 135 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இவ்வாறாக ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும், 
சவூதி தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடந்த மார்ச் மாதம் தொடரும் மோதலில் 2 ஆயிரத்து 355 பொதுமக்கள் உட்பட சுமார் 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 


இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக