By.Rajah.இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான, விமானத்தை கடத்திய இருவரின் பேச்சு அடங்கிய
வீடியோவை அல்கொய்தா தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி
நான்கு விமானங்களை கடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகள், உலக வர்த்தக மையமாக செயல்பட்ட
இரட்டைக் கோபுரங்கள் மீது விமானங்களை மோதச் செய்ததில் 3 ஆயிரம் பேர் இறந்தனர்.
இந்த துக்க நிகழ்ச்சியின் 12ம் ஆண்டு நினைவு தினம் சமீபத்தில்
அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் விமானத்தை கடத்திய 19 பயங்கரவாதிகளில், இரண்டு
பேரின் பேச்சு அடங்கிய வீடியோவை அல்கொய்தா அமைப்பு நேற்று இணையத்தளத்தில்
வெளியிட்டது.
சலிம் அல் ஹஸ்மி மற்றும் கலித் அல் மிதார் ஆகிய இரண்டு பேர் இராணுவ உடை மற்றும்
தலைப்பாகை, கையில் துப்பாக்கி சகிதமாக, அமெரிக்காவுக்கு எதிராக சூளுரைத்த பேச்சு
அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. அவர்களுக்கு பின்புறம் இஸ்லாமிய காலண்டரில்,
26.04.2001 என்ற திகதி இருப்பது தெளிவாக தெரிகிறது.
மிதார் பேசுகையில், அரபு தலைவர்கள் தங்கள் நாட்டைக் காட்டி கொடுத்து, மெக்கா
மற்றும் மெதினா ஆகிய இரண்டு புனித ஸ்தலங்களில் கிறிஸ்துவ அமெரிக்கர்களை தங்க
அனுமதித்து விட்டனர். அரேபிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கர்களை நாங்கள்
வெளியேற்றுவோம் என்றார்.
ஹஸ்மி, இது அமெரிக்காவுக்கு எதிரான புனிதப் போர் என சூளுரைத்தார்