siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

போரின் போது தமிழர்களிடம் திருடிய தங்கத்தை இந்தியாவுக்கு கடத்தும் சிங்களவர்கள்!

 
 
By.Rajah.தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது சிங்களப் படையினரால் திருடப்பட்ட தமிழர்களின் பெருமளவு தங்கம் இப்பொழுது இந்தியாவுக்கு கடத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
தங்கக் கடத்தல் என்பது பொதுவாக துபாய் அல்லது சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஆனால் இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் இதுவரை பிடிபட்டிருக்கும் 29 தங்கக் கடத்தல் சம்பவங்களில் 22 சம்பவங்கள் கொழும்பிலிருந்து விமானம் மூலம் வந்த பயணிகளிடமிருந்துதான்.
கொழும்பைப் பொறுத்தவரையில் அது தங்க வியாபாரம் நடக்கும் இடம் இல்லை- தங்கம் வெட்டியெடுக்கப்படும் இடமும் அல்ல! அப்படியானால் இது எப்படி சாத்தியம்?
இறுதி யுத்தம் முடிந்த பிறகு தமிழீழ விடுதலைப் புலிகள் சேகரித்து வைத்திருந்த 6 ஆயிரம் கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் அந்த தங்கம் எங்கே என்ற விவரம் தெரியவில்லை.
இதை தனிநபர் எவரேனும் கைப்பற்றியிருக்கின்றனரா? என்ற சந்தேகமும் உருவாகி உள்ளது.
இதேபோல் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டனர். தமிழ் மக்களின் பிணங்களின் மீதிருந்த தங்க ஆபரணங்களை சிங்கள படைக் கும்பல் திருடியிருக்கிறது.
இத்தகைய தங்கம்தான் இந்தியாவுக்கு கடத்தி வரப்படுகிறதோ என்ற சந்தேகத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் எழுப்பியிருக்கின்றனர்.
இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி கூறுகையில்,
இலங்கைப் பெண்ணொருவர் கொண்டுவந்த குடையின் மத்திய தண்டுப்பகுதி தங்கத்தால் செய்யப்பட்டிருந்ததை நாம் கண்டுபிடித்தோம். அதில் கறுப்பு நிற வர்ணம் பூசப்பட்டிருந்தது.
அதேபோல் இலங்கை பயணி ஒருவர் கொண்டுவந்த பையொன்றின் பிடியானது தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது' என்கிறார்