siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

இஸ்லாத்தை அவமதித்த அமெரிக்கத் திரைப்பட சர்ச்சை: யேமனிலும் தூதரகம் மீது தாக்குதல்



By,Rajah.இஸ்லாம் மதத்தை அவமதித்தாகக் கூறப்படும் அமெரிக்கத் திரைப்படத்துக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கரத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில் யேமனில் உள்ள அமெரிக்கத் தூதுவராலம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த சம்பவத்தில் 5 யேமன் நாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் சிரிய படையினருக்கும் இடையே பாரிய மோதல் இடம்பெற்றுள்ளது.




இத்தாக்குதலில் அமெரிக்க தூதரகத்தின் 10 வாகனங்கள் எரிக்கப்பட்டதுடன் , காரியாலயம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.


எனினும் அமெரிக்கத் தூதரக ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


மத்தியகிழக்கு நாடுகளில் தொடர்ச்சியாக அமெரிக்க தூதுவராலயங்கள் மீது நடத்தப்பட்டு வரும் இத்தாக்குதல்கள் மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ள ''Innocence of Muslims'' என்ற படத்தை இஸ்ரேலிய-அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சேம் பேசிலி என்பவரும், குர் ஆனை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த அருட் தந்தை டெரி ஜோன்ஸ் என்பவரும் தயாரித்துள்ளனர்.




எகிப்தில் தொடங்கிய கலவரம், லிபியாவிலிருந்து, யேமனுக்கு பரவியுள்ளதுடன் ஆப்கானுக்கும் பரவும் அபாயமுள்ளதாகத் தெரிகின்றது.


லிபியாவில் இடம்பெற்ற கலவரத்தில் அந்நாட்டிற்கான அமெரிக்க தூதுவர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் உட்பட நால்வர் கொல்லப்பட்டனர்.


இதனையடுத்து அமெரிக்கா அங்கு படைகளை அனுப்பியுள்ளது.


இதேவேளை மத்தியகிழக்கில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகங்களின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.