Friday, 14 September 2012, |
By.Rajah.'மெரினா' படத்தை பிறமொழிகளில் வெளியிடத் தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் இயக்குநர் பாண்டியராஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. |
மெரினா படம் வெளியான போது அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர். பாலமுருகன்
என்பவர் பாண்டிராஜ் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் சமரசம் ஆகியிருந்தார். இந்நிலையில் இப்படம் தெலுங்கில் வெளியாக உள்ளது. இதனால் இப்படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து ஆர்.பாலமுருகன் கூறுகையில், மெரினா படத்திற்காக நான் 50 லட்சம் செலவு செய்தேன். ஆனால் பல பிரச்சனைகளுக்கு பின்பு பாண்டிராஜ் ஒன்பது லட்சம் பணமாகவும் மீதியை செக்காகவும் கொடுப்பதாகவும் முடிவானது அப்படி அவர் கொடுத்த 15 லட்சத்தை தவிர வேறு ஒருகாசு இன்னும் தரவில்லை. படப்பிடிப்புக்கு முதலீடு செய்து செலவு செய்த பணமும் வரவில்லை. படத்தின் மூலம் அடைந்த லாபமும் என் பங்கிற்கானது வரவில்லை. நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஏமாற்றமும் வேதனையும் கொண்டவனாக நான் இருக்கிறேன். இந்நிலையில் செப்டம்பர் 1ம் திகதி தெலுங்கு நாளிதழில் ஒரு விளம்பரம் வந்திருக்கிறது. அதில் மெரினா தெலுங்கில் வெளியாகிறது என்றும் எஸ்.வி.ஆர்.மீடியா நிறுவனம் தெலுங்கில் வெளியிடுவதாகவும் விளம்பரம் வந்துள்ளது. தயாரிப்பாளர்களில் ஒருவரான என் அனுமதி பெறாமல் 'மெரினா' வை வேறு மொழிகளில் வெளியிடக் கூடாது என்று நீதிமன்றத் தடை உள்ளது. நீதிமன்ற அவமதிப்பாக படம் விற்கப்பட்டுள்ளது. வெளியிடுவதாக விளம்பரமும் வந்துள்ளது. இது குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எஸ்.வி.ஆர். மீடியா நிறுவனத்தின் மீதும் கிரிமினல் வழக்கு பாண்டியராஜ் மீதும் தொடர்ந்து இருக்கிறேன் என்றார். இறுதியாக பாலமுருகன் கூறுகையில், சினிமாவில் பழக்கம், நட்பு, நம்பிக்கை என்று பண விடயத்தில் யாரும் நினைத்து முறையான ஒப்பந்தம் எழுத்து மூலம் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டாம். அப்படி வைத்தால் என்னைப் போல ஏமாற வேண்டியிருக்கும் என்பதை எச்சரிக்கையாக சொல்கிறேன் என்றும் ஏமாற வேண்டாம் எனவும் கூறியுள்ளார் |
வெள்ளி, 14 செப்டம்பர், 2012
'மெரினா' படத்தை தெலுங்கில் வெளியிட தடை கோரி வழக்கு
வெள்ளி, செப்டம்பர் 14, 2012
செய்திகள்