By.Rajah.புகலிடம்நாடி வருவோரில்
இராணுவத்தில் இருந்து தப்பி ஓடிவந்தவருக்கு இடமில்லை என்று இந்த மாத இறுதிக்குள்
சுவிஸ் நாடாளுமன்றம் புதிய சட்டம் ஒன்றை இயற்றத் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று நடத்திய வாக்கெடுப்பில் 25 பேருக்கு 20 பேர் இந்தச்
சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்திற்கு வந்த அகதிகளில் பெருங்கூட்டத்தினர் எரித்ரேயா நாட்டிலிருந்து தப்பி வந்த இராணுவத்தினரேயாவர். சுவிஸ் செய்தி நிறுவனம், இராணுவத்தில் கொடுமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து ஆதரவளிக்கத் தயங்காது என்று தெரிவித்தது. தொல்லைதரும் அகதிகளுக்குத் தனியாக மையங்கள் ஏற்படுத்தப்படும். வட ஆப்பிரிக்காவில் இருந்து வருவோர் அரசுக்கு அதிகம் தொல்லை தருவதால் இச்சட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. குடும்பத்தினரை அழைத்து வருதல் தொடர்பாகவும் சட்டத்திருத்தம் செய்யப்படும். இனி அகதிக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டத் தகுதியே அவரது வாழ்க்கைத் துணைக்கும், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் வழங்கப்படும் |
வெள்ளி, 14 செப்டம்பர், 2012
இராணுவத்திலிருந்து ஓடி வந்தவர்களுக்குப் புகலிடம் கிடையாது: சுவிஸ்ஸில் புதிய சட்டம்
வெள்ளி, செப்டம்பர் 14, 2012
செய்திகள்