By.Ralah.எகிப்து நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது நஜீபுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை எகிப்தின் பிரதமராக இருந்தவர்
அகமது நஜீப்.
அந்த கால கட்டத்தில் வர்த்தக நடவடிக்கை ஒன்றில் சட்டத்துக்குப் புறம்பான
விதத்தில் பலன் அடைந்ததாக, நஜீப் மீது கடந்தாண்டு குற்றம் சாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்தாண்டு ஜனவரியில் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு கைது
செய்யப்பட்டார்.
இந்நிலையில் விசாரணை நடத்திய கெய்ரோ நீதிமன்றம், அகமது நஜீபுக்கு மூன்று
ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. சிறைத் தண்டனையுடன் 9 மில்லியன்
எகிப்து பவுண்டுகளை அபராதமாகக் கட்ட வேண்டுமென்றும் தீர்ப்பளித்தது.