By.Rajah.கொலிவுட்டில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 'வழக்கு எண் 18/9' படத்தில் நடித்து பரபரப்பான நடிகையானார் ரித்திகா ஸ்ரீநிவாஸ். |
தன் நடிப்பு திறமைக்கு சரியான வாய்ப்பை கொலிவுட் தரும் என்று இவர்
காத்திருக்கிறார். பரபரப்பாக பேசப்பட்ட 'வழக்கு எண் 18/9' படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டை பெற்ற இவர், கொலிவுட்டில் ஹரி இயக்கத்தில் உருவாகும் 'சிங்கம் -2' படம், கழுகு பட இயக்குனர் சத்யசிவா இயக்கும் படம் என பிசியாக நடித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், ஹரி இயக்கும் சிங்கம் படத்தில் நான் ரகுமானின் மனைவியாக நடிக்கிறேன். மற்றுமொரு படத்தில் செல்வா உடன் இணைந்து நடிக்கிறேன் என்றும் என் நடிப்பு திறமைக்கு தீனி போடும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன் எனவும் கூறியுள்ளார். |
வெள்ளி, 14 செப்டம்பர், 2012
'சிங்கம்-2' படத்தில் ரகுமான் மனைவியாக நடிக்கும் ரித்திகா ஸ்ரீநிவாஸ்
வெள்ளி, செப்டம்பர் 14, 2012
செய்திகள்