சர்ச்சைக்குள்ளான பிரிமியர் லீக் கிரிக்கெட் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது 16 வழக்குகளின் கீழ் ரூ. 1700 கோடி அபராதம் விதிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூதாகரமாக வெடித்துள்ளது.
சட்டவிரோத பணி பரிமாற்றம் ,வரிஏய்ப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கிய லலித் மோடி தேடப்படும் குற்றவாளியாக மத்திய அமலாக்கத்துறை அறிவித்திருந்தது. லண்டனில் தலைமறைவாக உள்ளார்.போர்ச்சுகலில் சிகிச்சை பெற்று வரும் தனதுமனைவியை சந்திக்க பயண ஆவணங்களை சரி செய்ய மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் லலித் மோடி மீதான வழக்குகள் அனைத்தையும் மத்திய அமலாக்கத்துறை தூசி தட்டியுள்ளது. விரைவில் அவர் மீது நடவடிக்கை பாயும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மத்திய அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில்,
ரூ. 1700 கோடி அபாரதம்
லலித் மோடி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு பிரிமியர் லீக் கிரிக்கெட் தலைவராக இருந்த போது ரூ. 425 கோடி பண மோசடி தொடர்பாக பி.சி.சி.ஐ சார்பில் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பபட்டிருந்தது. 2010-ம் ஆண்டு இன்டர்போல் அமைப்பின் சார்பில் புளு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அந்த நோட்டீஸ்
கெடு இன்றுவரை அமலில் உள்ளது. தவிர லலித் மோடி மீது இது போன்று பல்வேறு வழக்குகள் என 16 வழக்குகளில் லலித் மோடியிடம் ரூ. 1700 கோடி அபாரதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இவ்வாறு மத்திய அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
கருத்துரையிடுக