siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 4 ஜூன், 2015

வரலாற்றிலேயே மிகப்பெரிய அபராத தொகை: நீதிமன்ற தீர்ப்பு

புகையிலை நிறுவனங்கள், புகைப்பிடித்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 12.4 பில்லியன் டொலர்களை இழப்பீடாக கொடுக்க வேண்டும் என கனடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கியூபெக் மாகாணத்தில் 1998-ம் ஆண்டு, புகைப்பிடிப்பதால் வரும் உடல்நலக் கேடுகள் பற்றி விளம்பர வாசகம் மூலம் தனது தயாரிப்புகளில் சொல்லாத நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
கியூபெக் பகுதியில் சிகரெட் பிடிப்பதால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காசநோய், தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோயால், பாதிக்கப்பட்டுள்ளனர் என புகார் கூறப்பட்டிருந்தது.
பல ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், 12.4 பில்லியன் டொலர்களை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இம்பீரியல் டொபேக்கோ, ரோத்மன்ஸ் பென்சன் அண்ட் ஹைட்ஐஸ் மற்றும் ஜே.பி.ஐ. மென்டொனால்ட் ஆகிய சிகரெட் நிறுவனங்கள் மீது இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கியூபெக் மாகாணத்தில் புகைப்பிடித்ததால் பாதிக்கப்பட்டுள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த தொகையை பிரித்துக்கொடுப்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பினை ஏற்காத புகையிலை நிறுவனங்கள், மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளன.
கனடா வரலாற்றிலேயே ஒரு வழக்கில் இந்த அளவுக்கு பெரிய அபராத தொகை தண்டனையாக விதிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக