பிரித்தானியா நாட்டைச் சேர்ந்த 38 வயது
பாடலாசிரியர் மற்றும் பொப் இசை பாடகரான ஜேம்ஸ் பிளண்ட் வெர்பியரில் La vache (பசு)
என்ற பெயரில் ஓர் உணவகத்தை ஆரம்பித்திருந்தார்.
அங்கு நடந்த பத்திரிக்கையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், வெர்பியர் எனது
இல்லமாக தோன்றுகிறது. நான் சுவிஸ் குடியுரிமை பெற்று இங்கு தங்கவே விரும்புகிறேன். எனக்கு உச்சிப்பனிச் சறுக்கு விளையாட்டிலும் சமையலிலும் அதிக ஈடுபாடு இருப்பதால் இந்த இரண்டு விருப்பங்களையும் நிறைவேற்றுவதாக உள்ளது என்றார். பிளண்டருக்கு வெர்பியரில் 2007ம் ஆண்டு முதல் ஒரு வசந்த மாளிகை உண்டு. இளங்கோடை காலங்களிலும் இவர் இந்த வீட்டில் வந்து தங்கியிருப்பதை பெரிதும் விரும்புவார். வலாய்சில் உள்ள உச்சிப்பனிச்சறுக்கு விளையாட்டு விடுதிகளில் தங்கி விளையாடுவது இவருக்கு மிகவும் பிடிக்கும். இவர் இப்போது தொடங்கியிருக்கும் உணவகம் 2730 மீட்டர் உயரத்தில் அழகான மலைக்காட்சிகளுடன் விளங்குகிறது. முன்னாள் இராணுவ வீரரான இவர், அந்நாட்டின் உச்சிப்பனிச்சறுக்கு விளையாட்டு குழுவிற்கு தலைவராக இருந்தார். இவ்விளையாட்டு போட்டிகளில் வெற்றிகள் பல பெற்றிருக்கிறார் என பிரித்தானிய செய்தித்தாள்கள் இவரை போற்றுகின்றன. இதையடுத்தே கடந்த 2005ம் ஆண்டில் பொப் இசைக்கலைஞராக உருவெடுத்தார். இவருடைய BACk TO BETLAM என்ற பாடல் தொகுப்பு இவருக்கு பெரும் புகழை தேடித்தந்தது. இவருடைய 3 பாடல் தொகுப்புகளும் 18மில்லியன் பதிப்புகள் விற்றுத்தீர்ந்தன. தற்போதும் கூட ஜேம்ஸ் பிளண்ட் புதிய இசைத்தொகுப்புகளை உருவாக்கி வருகிறார். இந்த புதுவருட இரவில் பசுவைப்போல வேடமணிந்து தனது விடுதியை சுற்றி வரப்போவதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. |
செவ்வாய், 11 டிசம்பர், 2012
சுவிஸ் பிரஜையாக மாற விரும்பும் பொப் பாடகர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக