siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

சிரியா தாக்குதலிலிருந்து துருக்கியை பாதுகாக்கும் அமெரிக்கா

சிரியாவின் தாக்குதலில் இருந்து அதன் அண்டை நாடான துருக்கியைக் காப்பாற்ற பேட் நியாட் ஏவுகணைகளோடு அமெரிக்க ராணுவம் துருக்கி சென்றுள்ளது.
துருக்கியில் எல்லைப்பகுதிகளில் உள்ள நகரங்களில் ஸ்கட் ஏவுகணைகளை சிரியா கொண்டு வந்ததும் அமெரிக்கா, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து துருக்கிக்கு பாதுகாப்பு அளிக்க முன் வந்துள்ளன.

இதன்படி அமெரிக்கா பேட்ரியாட் ஏவுகணைகளை கொண்டு வந்துள்ளது.

இனி சிரியா, துருக்கி மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா சிரியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கும்.

துருக்கியின் கஸியன்டேல் எனும் இடத்தில் 27 அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ளன. துருக்கியின் அரசு செய்தி நிறுவனமான அனடோலு இத்தகவலை வெளியிட்டது.

எனினும் அமெரிக்கா தனது படைகள் துருக்கி சென்றிருப்பது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.

கடந்த மாதம் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் லீயோன் பானெட்டா, இந்த பகுதியில் உள்ள நாடுகளை தாம் பாதுகாக்கப்போவதாக தெளிவுபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக