18.09.2012.By.Rajah.சுவிட்சர்லாந்தில் வாட் மாநிலத்தில்
மாண்ட்ரேக்கு அருகில் கடந்த வாரக்கடைசியில் ஒருவர் குடித்துவிட்டு வண்டியை சாலை
ஓரத்தில் நின்ற ஆறு மாடுகள் மீது மோதியுள்ளார்.
அடிபட்ட ஆறுமாடுகளில் இரண்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தன. இன்னும் இரண்டு
படுகாயமுற்றதால் கருணைக் கொலைக்காக காத்திருக்கின்றன. அடுத்த இரண்டில் ஒன்றிற்கு
இடுப்பெலும்பு முறிந்துவிட்டதால் அதனைக் கொன்று விடலாமா என்று ஆலோசித்து
வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய 30 வயது இளைஞர் முறையான ஓட்டுநர் உரிமம் பெறாதவர். குடித்துவிட்டு வண்டி ஓட்டியதால் நிலைதடுமாறி வண்டியை வேலிக்குள் விட்டுள்ளார், அங்கிருந்து வண்டியைத் திருப்பியதில் ஒரு தண்ணீர் தொட்டி மீது மோதியுள்ளார். இறுதியாக வண்டியை சாலைக்குக் கொண்டுவந்து உயிர் தப்பியுள்ளார். இது குறித்து பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த விபத்து ஃபிரிபோக் மாநிலத்தில் உள்ள செயிண்ட் டெனிஸ் என்ற நகரத்திலிருந்து செயிண்ட் லீகர் என்ற நகரத்துக்குப் போகும் சாலையில் நடைபெற்றது. மாடுகளின் உரிமையாளர்களில் ஒருவரான பேட்ரிக் கோஹ்லி, மாடுகள் வேதனையில் துடிக்கும்போது இந்த நபர் ஓடிவிட்டதுதான் எனக்கு கோபத்தைத ஏற்படுத்துகிறது என்றான் |
செவ்வாய், 18 செப்டம்பர், 2012
குடிகார ஓட்டுநரால் பாதிக்கப்பட்ட ஆறு மாடுகள்
செவ்வாய், செப்டம்பர் 18, 2012
இணைய செய்தி