siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

இந்திய இராணுவ இரகசிய இறுவட்டுடன் இலங்கைக்கு தப்பமுயன்றவர் கைது



18.09.2012.By.Rajah.இந்திய இராணுவ இரகசியங்கள் அடங்கிய சீ.டி.யுடன் (இறுவட்டு) இலங்கைக்குத் தப்பிவர முயன்றதாகக் கூறப்படும் நபரொருவர் திருச்சி விமான நிலையத்தில் வைத்து இந்திய பொலிஸாரால்
கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் ௭ன்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்துவரும் மேற்படி நபரிடம் இந்திய இராணுவ இரகசியங்கள் அடங்கிய சீ.டி இருப்பதாக ்கியூீ பிரிவுப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்தே அவர் விமான நிலையத்தில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து செயற்படும் தீவிரவாத அமைப்புக்களுடன் தனக்குத் தொடர்பிருப்பதாகவும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் குறித்த சீ.டி.யை கொடுக்கவே தான் இலங்கை பயணிக்கமுயன்றதாகவும் பொலிஸாரிடம் சந்தேக நபர் கூறியுள்ளார். இதையடுத்து, சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குப் பின்னர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ௭திர்வரும் ரஅக்டோபர் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது