தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள விவசாய
ஓய்வூதியர்களுக்குக் கடந்த எட்டு மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
ஓய்வூதியத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட காலம் தொடக்கம் தமக்கு மாதாந்தம் ஓய்வூதியம்
வழங்கப்பட்டு வந்ததாகவும் கடந்த ஜனவரி தொடக்கம் ஓய்வூதியம் வழங்கப்படுவது
நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் தொடர்பு
கொண்டபோது ஓய்வூதியம் வழங்குவதற்கு நிதி இல்லாததால் வழங்க முடியவில்லை என்று
தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதேவேளை இந்த வருடத்தில் விவசாய ஓய்வூதியம் பெற
தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்ட ஓய்வூதியர்களுக்கும் இன்னமும் வழங்கப்படவில்லை
எனவும் தெரிவிக்கப்பட்டது.
|
செவ்வாய், 18 செப்டம்பர், 2012
விவசாய ஓய்வூதியம் 8 மாதங்களாக இல்லை; நிதி இல்லாததே காரணமாம்
செவ்வாய், செப்டம்பர் 18, 2012
தகவல்கள்