02.09.2012.BY.rajah.பிரபுசாலமன் ஒரு விஷயத்தை கையில் எடுத்தால் அதில் பர்பெக்ஷன் பார்க்காமல் ஓயமாட்டார்.
கும்கியின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதற்கும் தற்போது பிரபுசாலமன் பர்ஃபெக்ஷன் என்று பிடிவாதமாக இருப்பதுதான் காரணம் என்கிறார்கள் அவரது உதவியாளர்கள்! ஆமாம்! யானைக்கு தீனி போட முடியாது என்பர்கள். அதுபோல யானைப்படமான கும்கி படத்துக்கு கிராஃபிக்ஸ் வேலைகள் பார்த்து கட்டுபடியாகவில்லையாம்!தாமதம் ஆக ஆக தமிழ் ரசிகர்களும், தமிழ் திரையுலகமும் கும்கி படத்தினை எதிர்பார்த்து காத்து இருக்கிரார்கள். காரணம் படத்தின் டிரெய்லரும், பாட்டுகளுக்கும் கிடைத்து இருக்கும் வரவேற்பு. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்து இருக்கும் கும்கி படத்தினை பிரபு சாலமன் இயக்க லிங்குசாமி தயாரித்து இருக்கிறார்.
ஶ்ரீதேவி நடிக்கும் இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைப்பட ட்ரெயிலர் வெளியீடு வீடியோ இங்கே
ஶ்ரீதேவி நடிக்கும் புதிய திரைப்படம் இங்கிலிஷ் விங்கிலிஷ் ட்ரெயிலர் லாஞ்ச் படங்கள்
நமீதா Dr BatraS Annual Charity Photo Exhibition படங்கள்
ஜீவா ரசிகர்கள் முகமூடி திரைப்பட ரிலீஸ் கொண்டாட்டம் படங்கள்
ஒரு காலத்தில் காடுகளுக்குள் இருந்த யானை தற்போது உள்ள காலத்தில் ஏன் ஊருக்குள் வருகின்றன என்று திரைக்கதை அமைத்து இருக்கிறாராம் பிரபு சாலமன். மதம் பிடித்த யானைகளை கட்டுப்படுத்தும் கும்கி யானைகளின் வாழ்க்கையையும் பதிவு செய்து இருக்கிறார் பிரபு சாலமன். கும்கி படத்தில் ஒரு வித்தியாசம் அமைந்து இருக்கிறது. ஒரு படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் நாயகன், நாயகி, வில்லனை சுற்றியே இருக்கும்.
நடிகை சதா நடிக்கும் மைதிலி திரைப்படத்தின் புதிய படங்கள் சில
ஜெயம் ரவி அமலாபால் - நிமிர்ந்து நில் திரைப்படத்தில் படங்கள்
தமிழக முதல்வர் , எம் எஸ் வி, இளைஞராஜா கலந்துகொண்ட ஜெயா டிவி 14வது வருட விழா முழுமையான படங்கள்
ஆர்ட் கேலரியை தொடக்கிவைக்கும் நமீதா: வீடியோ
ஆனால் கும்கி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி அப்படத்தில் நடித்து இருக்கும் கும்கி யானை சுற்றி அமைந்து இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் இரண்டு யானைகள் மோதும் காட்சியை கிராபிக்ஸில் அமைத்து வருகிறார்கள். அக்காட்சி தத்துரூபமாக அமைய வேண்டும் என்று ஒரு குழுவே உழைத்து வருகிறது. அதனாலே படம் தாமதம் ஆகிறது.
தீபாவளிக்கு வாலு, துப்பாக்கி படத்துடன் கும்கி மோத இருக்கிறது. பெரிய பட்ஜெட் படங்களுடன் மோதினால் கவலையில்லை எனக்கு கும்கி படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்து வருகிறார் லிங்குசாமி. கும்கி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் படம் பார்க்கும் அனைவருமே கண் கலங்க இருக்கிறார்கள். ஏன் தெரியுமா அப்படத்தில் நடித்து இருக்கும் யானை இறுதி காட்சியில்...........(மீதியை திரையில் பாருங்களேன்) அடப்பாவமே