சுவிஸில்
பாட்டு வாத்தியார் ஒருவர், 16 பேருக்கு எயிட்ஸ் நோய் கிருமியை(HIV)
செலுத்தியமைக்காக கைது செய்யப்பட்டார்.
தன்னை அக்குப்பஞ்சர் டொக்டர் என அறிமுகப்படுத்திக் கொண்ட இவர், மற்றவர்களுக்கு
ஊசி போடுவதன் மூலமாக அவர்களது மூன்றாவது கண்ணைத்(அகக்கண்ணை) திறப்பதாக
கூறியிருக்கிறார். 51 வயதாகும் இந்த பாட்டு வாத்தியார் மக்களை கவரும் வகையில் பேசும் திறன் கொண்டவர். ஆனால் இவர் தொடக்கத்தில் HIV பாதிப்பு இல்லாமலே இருந்துள்ளார். பின்னர் சிலர் மூலமாக தனக்குள் HIV கிருமியை செலுத்தியுள்ளார். இதன் பிறகே தன்னுடைய மாணவர்களுக்கு HIV கிருமியை செலுத்தினார். இவரால் பாதிக்கப்பட்ட ஒருவர் கடந்த 2004ம் ஆண்டு பெர்னில் உள்ள இன்செல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இந்த உண்மையை தெரிவித்தார். இவரைப்போல வேறு இரண்டு பேரும் தங்களுக்கு இந்த பாட்டு வாத்தியார் மூலமாக HIV நோய்த் தாக்குதல் ஏற்பட்டிருக்கும் என்றனர். இது வரை 18 பேருக்கு இவ்வாறு HIV நோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸார் விசாரித்து வருகின்றனர் |
ஞாயிறு, 2 செப்டம்பர், 2012
மாணவர்களுக்கு எயிட்ஸ் கிருமியை புகுத்திய பாட்டு வாத்தியார்
ஞாயிறு, செப்டம்பர் 02, 2012
செய்திகள்