02.09.2012.BY.rajah.கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்லூரியின் ஆனைவிழுந்தான் காணியை இராணுவத்தினரிடம் ஒப்படைப்பதற்கு சில அதிகாரிகள் முயற்சி செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொழில் வாய்ப்பு ஏதுமின்றி இருந்த பெரும் எண்ணிக்கையான இளைஞர், யுவதிகளுக்கு தொழில்திறனை விருத்தி செய்யும் நோக்குடன் பத்து வருடங்களுக்கு முன் கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்லூரி உருவாக்கப்பட்டது. அங்கு ஆயிரக் கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில்சார் கற்கை நெறியைப் பெற்றிருந்தனர்.
இந்த கல்லூரிக்குரிய ஆனைவிழுந்தானில் உள்ள 3 ஏக்கர் காணி மற்றும் ஊனமுற்றோர் புனர்வாழ்வுச் சங்கத்துக்குரிய காணிகளை ஏற்கனவே இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளது. அங்கு 652 ஆவது படைப் பிரிவு முகாமிட்டுள்ளது. அந்தக் காணிகளைத் தான் இராணுவம் கையகப்படுத்த முயற்சிக்கிறது.
அதற்கான கோரிக்கையையும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது. பிரதேச காணிப் பயன்பாட்டுக் கலந்துரையாடல்களிலும் அதனை வலியுறுத்தி வந்துள்ளது.
கடந்த மே 25 ஆம் திகதி கரைச்சிப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற காணிப் பயன்பாட்டுக் குழுக்கூட்டத்திலும் இராணுவத்தின் இந்தக் கோரிக்கையை பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் பிரதேச சபைத் தலைவர் உட்பட அனைவரும் (90 வீதமானோர்) ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அடியோடு மறுத்தும் விட்டனர்.
இவ்வாறான நிலையில், எதிர்வரும் 6 ஆம் திகதி வியாழக்கிழமை குறித்த காணியைஇ இராணுவத்துக்கு இரகசியமான முறையில் வழங்குவதற்கு அதன் தற்போதைய நிர்வாகத்தின் முக்கிய பிரதிநிதிகள் முனைந்துள்ளனர் என்றும் இந்தக் காணிக்கு மாற்றீடாக ஜெயபுரம் வீதியில் உள்ள பொருத்தமற்ற காணி ஒன்றில் நூறு அடி நீளமான அரைநிரந்தரக் கட்டடம் ஒன்றை அமைத்துத் தொழில் நுட்பக் கல்லூரிக்கு தருவதாக இராணுவம் கூறியுள்ளது என்றும் அதன் அடிப்படையில் குறித்த காணியை அவர்களுக்குத் தாரை வார்க்கத் தயாராகி வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் இயக்குநர் சபை ஏனைய நிர்வாக அலகுகள் என்பவற்றின் அனுமதியின்றி ஒரு சில அடிவருடிகளின் செல்வாக்குடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதேவேளை, மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியான ஆனைவிழுந்தான் கிராமத்தில், ஒரு உப தொழில்நுட்பக் கூடத்தை அமைத்து அங்கு கடந்த காலங்களில் தொழில் கற்கை நெறிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இந்தக் கூடம் 2009 ஆம் ஆண்டின் பின்னர் செயலிழந்துவிட்டது