நீ தானே என் பொன் வசந்தம் படத்திற்கான இசை வெளியீடு நேற்று கோலாகலமாக நடந்தது. |
கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான 'நீ தானே என் பொன் வசந்தம்' படத்தின்
இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்தது. விழாவில் படத்தின் நாயகன் ஜீவா, சமந்தா, சந்தானம் மற்றும் படக்குழு ஐரோப்பிய இசைக்கலைஞர்கள், திரையுலக பிரபலங்கள் திரளாக கலந்து கொண்டார்கள். விழா நாயகன் இசை ஞானி இளையராஜா, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இருவரும் 'நீ தானே என் பொன் வசந்தம்' பட பாடல்கள் உருவான விதம் பற்றி பேசினர். கௌதம் விரும்பிக் கேட்ட பாடல்களை இளையராஜா பாட, அரங்கம் அதிர்ந்தது. திரையுலகினர் உள்ளிட்ட ரசிகர்கள் பாடல்களை ரசித்து கை தட்டினர். இளையராஜா தலைமையில் ஐரோப்பிய இசைக்கலைஞர்களின் இசையில் 'ராசாவின் பாடல்கள்' ஒலித்தன. நீ தானே என் பொன் வசந்தம் படத்தின் இசைக்குறுந்தகடை இயக்குனர் கே.பாலச்சந்தர் வெளியிட, சூர்யா பெற்றுக்கொண்டார். விழாவில் கே.பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, சுந்தர்ராஜன் உள்ளிட்ட இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றிய கொலிவுட் பிரபல இயக்குனர்கள் தங்களின் பட உலக அனுபவங்களைக் கூறி இளையராஜாவுக்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்தனர். |
ஞாயிறு, 2 செப்டம்பர், 2012
நீ தானே என் பொன் வசந்தம் இசை வெளியீடு கோலாகலம்
ஞாயிறு, செப்டம்பர் 02, 2012
செய்திகள்