02.09.2012.BY.rajah.இலங்கை மின்சார சபையின் சுன்னாகம் மின் நிலையத்துக்குப் பெரிய ஜெனரேற்றர் ஒன்று
எடுத்துவரப்பட்டுள்ளது. கப்பல் மூலம் எடுத்து வரப்பட்ட இந்த ஜெனரேற்றர்
காங்கேசன் துறைமுகத்தில் இறக்கப்பட்டது.
அங்கிருந்து சுன்னாகத்துக்கு தரை வழியாக
எடுத்துச் செல்லப்பட்டது. இந்தப் பெரிய ஜெனரேற்றரைக் கொண்டு செல்வதற்கு 72
சில்லுகளைக் கொண்ட "கெண்டெய்னர்' வாகனம் பயன்படுத்தப்பட்டது.
இந்த ஜெனரேற்றரைச் சுன்னாகம் கொண்டு சென்று
சேர்ப்பதில் இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் பெரும் சிரமப்பட்டனர்.
ஜெனரேற்றர் அளவில் பெரியதாகவும் மிக
உயரமானதாகவும் இருந்தமையால் வீதியால் அதனைக் கொண்டு செல்வதில் சிரமங்கள் எதிர்
நோக்கப்பட்டன. வீதிகளுக்குக் குறுக்காகச் சென்ற மின்சார வயர்கள் அகற்றப்பட்டு மின்
விநியோகம் நிறுத்தப் பட்டே ஜெனரேற்றர் எடுத்துச் செல்லப்பட்டது