02.09.2012.BY.rajah.வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுமாக இருந்தால் தமிழ் மக்கள் தமது தலைவிதியை தாமே
நிர்ணயிக்கக் கூடிய நிலை ஏற்படும். அத்துடன் தமிழர்களது தனித்துவமும்
பாதுகாக்கப்படும்.
அதன் காரணமாகவே வடக்கு கிழக்கு மாகாணங்கள்
இணைக்கப்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வருகிறது. இவ்வாறு
தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்
பிரேமசந்திரன்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு
மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு
உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்
தெரிவித்துள்ளதாவது:
ஒரு நாட்டில் மக்களின் பலத்துடன் தான் ஓர் அரசு
தெரிவு செய்யப்பட்டு, அதற்கென அமைச்சரவையும் உருவாக்கப்படுன்றது. அந்த
அமைச்சரவைக்குத்தான் அதிகாரங்கள் போய்ச்சேரும். மாகாணத்தில் முதலமைச்சரும்
அங்கிருக்கும் ஏனைய அமைச்சர்களும்தான் தமக்கிருக்கும் அதிகாரங்களைக் கொண்டு
நிர்வாகத்தை நடத்துவார்கள். இதுதான் வழிமுறை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில்
ஆட்சியமைக்கும். அப்படி ஆட்சியமைத்தால் அபிவிருத்தியே எமது நோக்கமாக இருக்கும்.
இருக்கக்கூடிய அதிகாரங்களுக்குள் மக்களுக்கு என்னென்ன செய்ய முடியுமோ அதனைச் செய்தே
தீருவோம். அதிகாரங்களை மேலும் மேலும் பெற்றுக் கொள்வதற்கு நீதிமன்றத்திலும்
வீதிகளில் இறங்கியும் போராடுவோம்.
வடக்கும் கிழக்கும் இணைக் கப்பட்டால் தமிழ் பே_ம்
மக்கள் தமது தலைவிதியைத் தாமே நிர்ணயிக்கக்கூடிய சூழல் ஏற்படும். அத்துடன்
அவர்களுடைய தனித்துவம் பாதுகாக்கப்படும். அதனால் தான் நாங்கள் ஒரே நிர்வாக அரசியல்
அலகாக வடக்கும் கிழக்கும் இணைக்கப்படவேண்டும் என்று கேட்கின்றோம்.
இலங்கை அரசு ஒன்பது மாகாணங்களை ஏழு மாகாணங்களாகக்
குறைக்க இருக்கிறது. அந்த ஏழு மாகாணங்களின் அடிப்படை என்னவென்றால் கடலுடன் தொடர்பு
இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் வடமத்திய மாகாணத்திற்கு கடலுடன் தொடர்பு
இல்லை.
வெலிஓயாவுடன் அனுராதபுரம், பொலன்னறுவை போன்ற
மாவட்டங்களை இணைக்கும் போது வடக்குக்கும் கிழக்குக்குமான நிலத் தொடர்பு
துண்டிக்கப்படும். இந்த நிலை ஏற்படும்போது வடக்கு வேறு, கிழக்கு வேறு என்ற நிலை
உருவாகும்.
மத்திய மாகாணத்துக்கு ஒரு கடல் தொடர்பு கிடையாது.
திருகோணமலை மாவட்டத்தை மத்திய மாகாணத்துடன் இணைப்பது என்ற திட்டமும் அரசாங்க
நிகழ்ச்சி நிரலில் இருக்கின்ற விடயமாகும். திருகோணமலை மாவட்டத்தை கபளீகரம்
செய்துவிட இவ்வளவு மோ\மான கபடமான நிகழ்ச்சி நிரலை இந்த அரசு கொண்டு இயங்குகின்ற
பொழுது தமிழ் மக்கள் இவர்களுடன் இணைந்திருக்க முடியாது.
யார் எவ்வாறு தலைகீழாக நின்றாலும் 17ஆசனங்கள்
பெற்று நிச்சயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும். இத்துடன்
நிறுத்திவிடாது முழுமையான தீர்வை நோக்கிய எமது போராட்டம் தொடர்ந்து நடக்கும்.
அதற்கு மாகாணசபையும் கைகொடுக்கும் என்றார்.