siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணங்கிச்செல்ல இலங்கை தீர்மானம்

 ஞாயிற்றுக்கிழமை, 02 செப்ரெம்பர் 2012, BY.rajah.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணங்கிச் செயற்படுவது என்று இலங்கை அறிவித்துள்ளது.
கடந்த மார்ச்சில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம் நிறைவேற்றியமையை அடுத்து இலங்கை குறித்த தீர்மானத்தை ஆட்சேபித்து கருத்துக்களை வெளியிட்டு வந்தது.
இந்தநிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஆணைக்குழு அமர்வில் ஆராயப்படவுள்ளது.
இதன்போது தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணங்கிச்செல்வது என்று இலங்கை தீர்மானித்துள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் முன்னேற்ற அறிக்கை, ஐக்கிய நாடுகளின் இணையத்தளத்திலும் கடந்த வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்டது.
இதன் ஒரு கட்டமாக ஜெனீவாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரவிநாத் ஆரியசிங்க, கடந்த வாரங்களி;ல் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளித்த மற்றும் எதிர்ப்பு வெளியிட்ட அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைக்குறித்து விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு செல்லவுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்