நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் மீண்டும் நடிப்பேன் என்று நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார். |
கொலிவுட்டில் தொடங்கி பாலிவுட்வரை முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து
கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. திருமணத்திற்கு பின்னர் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஸ்ரீதேவி 14 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தமிழ்-இந்தி ஆகிய 2 மொழிகளில் உருவாகும் இங்கிலீஷ்-விங்கிலீஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி ஊடகத்தினரிடம் கூறுகையில், இத்தனை காலம் நடிக்காமல் இருந்ததற்குக் காரணம், என் மகள்கள் இருவரும் சின்ன குழந்தைகளாக இருந்தார்கள். அவர்களை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. தற்போது அவர்கள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன், என்றார். ரஜினிகாந்த் - கமல்ஹாசன் ஆகிய இருவருடனும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீதேவி, நிச்சயமாக நடிப்பேன். இரண்டு பேரையும் சமீபத்தில் கூட சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் நியாயமாக இதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்றும் பொருத்தமான சூழல் அமைய வேண்டும் எனவும் கூறியுள்ளார் |
ஞாயிறு, 2 செப்டம்பர், 2012
ரஜினி, கமலுடன் மீண்டும் நடிப்பேன்: ஸ்ரீதேவி
ஞாயிறு, செப்டம்பர் 02, 2012
இணைய செய்தி