siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு கோழி, ஆடுகள் ஒப்படைப்பதற்கான தடை நீக்கம்

02.09.2012.BY.rajah.
முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு கோழிகள், ஆடுகளை பக்தர்கள் ஒப்படைப்பதற்கு நேற்றுக்காலை பொலிஸார் விதித்திருந்த தடை சிறிது நேரத்தில் ஜனாதிபதியின் இந்து சமய இணைப்பாளர் சிவஸ்ரீ பாலரவிச்சங்கர சிவாச்சாரியாரின் தலையீட்டை அடுத்து நீக்கப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியின் இந்து சமய விவகார இணைப்பா ளர் சிவஸ்ரீ பாலரவிச் சங்கர சிவாச்சாரியார் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்துக்குச் சென்று வேள்வி மற்றும் மிருக பலி தொடர்பாக கலந்துரையாடலொன்றை நடத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தர்மகர்த்தா காளிமுத்து சிவபாதசுந்தரம் மற்றும் சிலாபம் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள புனித கபிலவஸ்து இலங்கையின் முக்கிய விகாரைகளில் மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படுவதால் ஜனாதிபதி மிருக பலியை இடை நிறுத்தும்படி கோரியுள்ளதை ஏற்று மிருகபலியை பின் போடுவதாக இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய நிர்வாகத்துறை உறுதியளித்தது.

அத்துடன் இன்றைய தினம் பக்தர்கள் தமது நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்காக ௭டுத்து வரும் கோழி, ஆடுகளை ஆலயம் பொறுப்பேற்றுக் கொள்ளுமெனவும் இந்தக் கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டது. இருந்தும் நேற்றுக் காலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் ஒப்படைக்கவென பக்தர்கள் ௭டுத்து வந்த ஆடு, கோழிகளை பொலிஸார் ஆலயத்துக்குள் ௭டுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.

இதையடுத்து ஆலய நிர்வாகம் ஜனாதிபதியின் இந்து சமய விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ பாலரவிசங்கர சிவாச்சாரியாருடன் தொடர்பு கொண்டு இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்தது. சிவாச்சாரியார் உடனடியாக பொலிஸ் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் ௭ட்டப்பட்ட இணக்கப்பாடு குறித்து விளக்கியதும் பொலிஸார் தடையை நீக்கினர். நேற்று ஆலயத்தில் மிருக பலி இடம்பெறவில்லை. ௭னினும் பூஜைகள் வழமை போல நடைபெற்றன.