கொலிவுட்டில் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா. |
ரஜினி, கமல், அஜித், கார்த்திக் என்று முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்த ரம்பா
சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து திரைத்துறையிலிருந்து விலகினார். தற்போது அவரது அண்ணன் லக்ஸ்மி ஸ்ரீநிவாஸ் என்கிற வாசு கொலிவுட்டில் சிறிய இடைவெளிக்கு பின்பு படத்தயாரிப்பில் இறங்கியுள்ளார். பட உலகில் ஐந்து வருட அனுபவத்தோடு படங்களை தயாரித்தவர். சிரஞ்சீவி, பரிசுரி பிரதர்ஸ், இயக்குனர் சித்திக் ஆகியோரிடம் பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் என்பவரை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இயக்குனராக அறிமுகப்படுத்துக்கிறார். இதில் நாயகனாக நகுல் நடிக்கிறார். இப்படத்தை காதல் கலந்த நகைச்சுவை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார். பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும். தற்போது நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்களின் தெரிவு நடைபெற்று வருகிறது. |
ஞாயிறு, 2 செப்டம்பர், 2012
கொலிவுட்டில் படம் தயாரிக்கும் ரம்பாவின் அண்ணன்
ஞாயிறு, செப்டம்பர் 02, 2012
செய்திகள்