| ||||||||
புது டில்லியில் இருந்து சனிக்கிழமை இரவு 10.30க்குப் புறப்பட்டு இன்று காலை சென்னைக்கு வந்து சேரவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்இ இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வந்தபோது ரயிலின் 11ஆவது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து அறிந்ததும் ரயில் பெட்டிகள் உடனடியாக அகற்றப்பட்டு பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டனர். ஆயினும் இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்துக்கு விரைந்தார். விபத்தைப் பார்வையிட்ட பின் அவர் செய்தியாளரிடம் பேசியபோதுஇ இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இன்னும் சிலர் பெட்டியில் பலியாகியிருக்கக்கூடும் என்றார். |
திங்கள், 30 ஜூலை, 2012
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ: 25 பேர் பலி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக