siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 30 ஜூலை, 2012

இலங்கையரது பயணங்களின் போக்கினை மீள் வரையறை செய்யும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ள Expo Rail

_
2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் Expo Rail ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே அச்சேவையானது இலங்கையின் ரயில் பயணங்களின் போக்கினை மீள் வரையறை செய்யும் முயற்சியில் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. தற்போது பதுளை, கண்டி, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய நான்கு இடங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ள Expo Rail சேவையானது கடந்த எட்டு மாதங்களில் மொத்தமாக 25,000 இற்கும் மேற்பட்டோருக்கு தனது சொகுசு ரயில் பெட்டிகளில் பயண வசதியளித்துள்ளது.

சொகுசு ரயில் பெட்டிகளிலுள்ள ஒவ்வொரு பகுதியும் சௌகரியத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால், Expo Rail சேவையானது அதில் பயணம் செய்கின்ற பயணிகளுக்கு தனிச்சிறப்புமிக்க ஒரு பயண அனுபவம் கிடைப்பதை உறுதிப்படுத்துகிறது. இன்றைய காலகட்டத்தில் கிடைக்கக் கூடியதாகவுள்ள மிகவும் முன்னேற்றகரமான வசதிகளை கொண்ட ரயில் போக்குவரத்து முறைமையாக தரப்படுத்தப்பட்டுள்ள Expo Rail சேவையில் பணியாற்றும் நட்புறவுமிக்க ரயில் பணியாளர்கள், ஒவ்வொரு பயணியையும் இன்முகத்தோடு எதிர்கொண்டு, தமது சொகுசு ரயில் பெட்டிகளுக்கு வரவேற்கின்றனர்.

பரந்தளவிலான சௌகரியம் மற்றும் மன அமைதி ஆகியவற்றை கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்ட சாய்வான நிலைக்கு மாற்றியமைக்கக் கூடிய ஆசனங்கள், ஒவ்வொரு ஆசனத்திற்கும் தனித்தனியான மின்னிணைப்பு வசதியை கொண்டமைந்த - முற்றிலுமாக குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகள், அகன்ற திரையமைப்பையுடைய LCD தொலைக்காட்சிகள் மற்றும் இலவச Wi-Fi வசதி போன்ற சிறப்பம்சங்களை இது கொண்டுள்ளமை மட்டுமன்றி, Expo Rail இல் பயணிக்கின்ற வேளையிலேயே உணவு பரிமாறப்படுகின்றமை ரயில் சேவைக்கு புதியதொரு பரிமாணத்தை வழங்குகின்றது. அதில் காணப்படும் ஏனைய வசதிகளுள் - போதுமான இடப்பரப்பைக் கொண்ட மேற்புற இறாக்கை, உடனடியாக பெற்றுக் கொள்ளக்கூடிய முதலுதவி மற்றும் சுத்தமான கழிவறைகள் போன்றவையும் உள்ளடங்குகின்றன. இதற்கு மேலதிகமாக, ரயில் பணியாளர்கள் ஒவ்வொரு பயணிக்கும் பிரத்தியேகமான சேவைகளை வழங்குகின்றனர்.



“அண்மையில் Expo Rail விஷேட செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுத்தது. இதன் ஒரு அங்கமாக, பல்வேறு நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு வருகைதந்திருந்த டில்மா நிறுவனத்தின்; பிரதிநிதிகளுக்கென பிரத்தியேகமான ரயில் சேவை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பிரதிநிதிகள் இவ்விஷேட ரயிலில் நானுஓயா பிரதேசத்திற்கு சென்று திரும்பி வந்தனர். இதுவிடயத்தில் எமக்கு கிடைத்த வரவேற்பு மிகவும் சாதகமானதாகவும் உண்மையிலேயே உற்சாகம் அளிப்பதாகவும் காணப்பட்டதுடன்;, அதற்கான சகுனமும் சிறப்பானதாக அமைந்திருந்தது" என்று வர்த்தக அபிவிருத்தி மற்றும் நிர்வாக உதவி முகாமையாளர் செல்வி. அம்ரா ஷரீர் தெரிவித்தார்.

“எமது ஊழியர்கள் பூரணமாக பயிற்றப்பட்டுள்ள அதேவேளை, ரயில் பயணத்தின் போது ஏற்படக்கூடிய எந்தவொரு அவசர நிலைமைக்கும் ஈடுகொடுத்து செயற்படத்தக்க ஆற்றலை கொண்டுள்ளனர்” என்று குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.ஹனீப் யூசுப் தெரிவித்தார். “அண்மைக்காலங்களில் திருகோணமலை, கண்டி மற்றும் பதுளை போன்ற இடங்களில் ஏற்பட்ட ரயில் தடம்புரள்வு சம்பவங்கள் இதற்கு நல்லதொரு முன்னுதாரணமாகும். இந்த ரயில்கள் இலங்கை புகையிரத திணைக்களத்தினால் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. ஆயினும் இவ்வாறான சம்பவங்கள் முற்றுமுழுதாக எமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவையாகும். எவ்வாறிருந்த போதிலும் Expo Rail அணியினர் உடனடியாக அவசியமான அடுத்தகட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமான மேற்கொண்டதுடன், பயணிகள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அதுமட்டுமன்றி சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், இலங்கை புகையிரத திணைக்கள ஊழியர்களள் போன்ற தரப்பினரிடம் இருந்தும் நாம் இது விடயத்தில் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொண்டோம். பயணிகளின் பொறுமை மற்றும் ஒத்துழைப்புக்காக அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் அதிசொகுசு ரயில் சேவையான Expo Rail ஆனது, உண்மையிலேயே இலங்கையின் புகையிரத சேவைத் துறையை மீள் வரையறை செய்துள்ளது. பயணத்தின் ஒவ்வொரு விடயத்திலும் முதற்தர சேவைக்கு உத்தரவாதம் வழங்கப்படுகின்றமையானது, இலங்கையின் விடுமுறைகால பயணப்பொதிகளில் இவ்வளவு காலமும் கிடைக்காது போயிருந்த வசதியாக காணப்படுகின்றது. புகையிரத சேவையில் எக்ஸ்போலங்கா நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியானது, பயணம்சார் மற்றும் சுற்றுலா துறையில் இலங்கை கொண்டுள்ள உள்ளார்ந்த ஆற்றலை அதிகரிக்கும் முயற்சியில் ஒரு முன்னோக்கிய செயற்பாடாக அமைந்துள்ளது. அதன்மூலம், உலகெங்குமுள்ள பயணிகளினால் விரும்பப்படுகின்ற ‘கட்டாயமாக விஜயம் செய்ய வேண்டிய' ஒரு நாடாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும்.

Expo Rail ஆனது, அனைத்துப் பயணிகளுக்குமான ஒரு பெறுமதிசேர் சேவையாக www.exporail.lk என்ற தனது பிரத்தியேக இணையத்தளத்தின் ஊடாக ஒன்லைன் முன்பதிவுகளை மேற்கொள்ளவும் தகவல்களை பெற்றுக் கொள்ளவும் வழியமைத்துள்ளது. அதுமாத்திரமன்றி வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் (24X7) இயங்குகின்ற வாடிக்கையாளர் சேவை தொலைபேசி தொடர்பாடல் வசதியையும் கொண்டுள்ளது.

புவியை பாதுகாப்பது தொடர்பில் சர்வதேச ரீதியாக அதிக கவனம் செலுத்தப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில், ரயில் பயணத்தில் காணப்படும் சூழல்சார் அனுகூலங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. விமானங்களையும் கார்களையும் விட ரயில்கள் சூழலுக்கு எப்போதும் குறைந்த அளவிலான தாக்கத்தையே தோற்றுவிப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஜெட் விமானம் ஒன்றுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, ரயில்கள் 70% வரையில் குறைந்தளவிலான வலுவையே பயன்படுத்துகின்ற அதேநேரம், 85% அளவுக்கு குறைவான காற்று மாசடைதல் தாக்கத்தையே விளைவிக்கின்றன. விமானம் ஒன்றுடன் ஒப்பிடுகையில், சம அளவிலான தூரத்திற்கு பயணிப்பதற்கு 17 மடங்கு குறைவான எரிபொருளையே ரயில்கள் பயன்படுத்துகின்றன. அத்துடன் கார் ஒன்றுடன் ஒப்பிடுகையில் ‘பயணிகள் கிலோமீற்றா' ஒன்றுக்கு 5 மடங்கு குறைவான எரிபொருளையே பயன்படுத்துகின்றன. அதாவது, 30 பேரைக் கொண்ட ஒரு குழுவினர் Expo Rail இல் பயணிப்பார்களாயின், அவர்கள் 6 வாடகைக்கார்களில் பயணிப்பதை விடவும் 30 மடங்கு குறைவான எரிபொருளையே பயன்படுத்துவார்கள்

0 comments:

கருத்துரையிடுக