| ||||||||
திரு. என்.எஸ்.ஜே. ஆராச்சி (நுகேகொடை கிளை), திருஃதிருமதி. ஜீ.எஸ். பெரேரா (மகரகம), திரு. பி.எஸ் பத்திரண (குளியாப்பிட்டிய கிளை), செல்வி. என்.பி.சந்திரணி (கொட்டாவை கிளை), திரு. டபள்யு.எம்.ஜே. வீரசிங்க (வெலிமடை கிளை), திருமதி. ஈ.எம்.தயனி அனுராதபுர கிளை), திருமதி. மொஹிடீன் ஜயஜோதி (பொகவந்தலாவை கிளை), திரு.டி.பி.எம். சமரசிங்க (கிரிபத்கொடை கிளை), திரு.எம். விஸ்வநாதன் (மட்;டக்களப்பு கிளை), மாஸ்டர் ஆர்.கே. ரணவீர (களுபோவில கிளை) ஆகிய அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களே இதன்போது பரிசுகளை பெற்றுக் கொண்டவர்களாவர். பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான திருமதி. மொஹிடீன் ஜயஜோதி 40 வருடங்களாக தேயிலைக் கொழுந்து பறிக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். சவால்களிற்கு முகம்கொடுத்து மீண்டெழும் ஆற்றல்மிக்கவரான மூன்று பிள்ளைகளின் தாயான இவர், செலான் வங்கியின் 'பரிசு மேல் பரிசு' ஊக்குவிப்பு திட்டத்தின் 5ஆவது சீட்டிழுப்பில் மடிகணணி ஒன்றை வென்றெடுத்துள்ளதாக பொகவந்தலாவை கிளை முகாமையாளர் அறிவிக்கும் நாள் வரைக்கும், தகவல் தொழில்நுட்பம் என்பது அவருக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகவே தோன்றியது. “பதினைந்து வருடங்கள் பழமைவாய்ந்த எனது சேமிப்புக் கணக்கின் மூலம் எந்தவொரு பரிசையும் வென்றெடுப்பேன் என்று நான் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆயினும், அது எனக்கு மடிகணணி ஒன்றினை பெற்றுத்தந்துள்ளது. இதனையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அதேநேரம், நுவரெலியா மாவட்டத்தின் முலோயா பிரதேசத்தில் ஒரு ஆசிரியராக கடமையாற்றும் எனது மூத்த மகன் யோகநாதனுக்கு (வயது 30) இந்த மடிகணணியை நான் பரிசாக வழங்குகின்றேன். அவர் தனது தொழிலை மேலும் சிறப்பாக மேற்கொள்வதற்கு இது உதவியாக அமையும் என்று நான் திடமாக நம்புகின்றேன்" என்று பிள்ளகளிடத்தில் தாயொருவர் கொண்டிருக்கும் அன்போடு அவர் கூறினார். செலான் வங்கியின் பொகவந்தலாவை கிளை ஊழியர்களுக்கு அவர் விஷேடமாக பாராட்டு தெரிவித்தார். “எமது பிரதேசத்தில் முதன்முதலாக திறக்கப்பட்ட வங்கிகளுள் ஒன்றாக இது காணப்படுகின்றது. எமது பகுதியிலுள்ள தொழிலாளர்கள் பொதுவாக வங்கிகளுக்குச் செல்ல சற்று அச்சம் கொள்வார்கள். இருப்பினும், செலான் வங்கியின் உத்தியோகத்தர்கள் எம்மிடம் வந்தார்கள், எமது மொழியினை பேசினார்கள். அதன்மூலமாக அதுவிடயத்தில் நாம் ஒருவித சௌகரியத்தை உணரும்படி செய்தனர். எனவே இந்த அற்புதமான, மனிதநேயமிக்க சேவைக்காக அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம" ஏன்று அவர் மேலும் தெரிவித்தார். செலான் வங்கியின் 'பரிசு மேல் பரிசு' வெகுமதி வழங்கல் திட்டம் கடந்த வருடத்தின் அக்டோபரில் மிகப் பிரமாண்டமான முறையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அப்போது முதல் இதுவரை நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த 13,100 (2620X05 மாதங்கள்) வெற்றியாளர்களுக்கு பெறுமதிமிக்க பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் - ரூபா 01 மில்லியன் பணம், மோட்டார் சைக்கிள்கள், LCD தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள், ஹோம் என்டர்டெயின்மன்ட் சிஸ்டம், சோபா கதிரைகள், மடிகணணிகள், முழு அளவில் தன்னியக்கமாக செயற்படும் சலவை இயந்திரங்கள், 4 எரிகருவிகளைக் கொண்ட கேஸ் அடுப்புக்கள், தங்க நாணயங்கள் போன்ற பெருந்தொகையான பரிசுகளை ஒவ்வொரு மாதமும் வென்றெடுத்துள்ளனர். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து 'செலான் பரிசு மேல் பரிசு' திட்டமானது நவீன வங்கியியல் செயற்பாடுகளின் உத்வேகமான போக்கில் புத்தெழில்மிக்க வாழ்க்கை முறைமை ஒன்றினை தோற்றுவித்துள்ளதுடன், எந்;தவொரு வங்கியினாலும் இதுவரை வழங்கப்படாத தனிச் சிறப்புமிக்க பரிசுத் திட்டம் என்ற பெருமையையும் பெறுகின்றது. இதற்கு மேலதிகமாக, செலான் வங்கியின் எட்டு விதமான வங்கிச் சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு வெற்றி பெறுவதற்கான உன்னதமான வாய்ப்புக்கள் பலவற்றையும் இது வழங்குகின்றது. அந்த எட்டு சேவைகளாக - 'Seylan Sure' (தனிநபர் சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்குகள்), டிக்கிரி பிளஸ் (சிறுவர்களுக்கான சேமிப்புக் கணக்கு), நிலையான வைப்புக்கள், வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்குகள் - NRFC (சேமிப்புகள் மற்றும் நிலையான வைப்புககள்), 'Cool Cash' (இளைஞர் கணக்குகள்), அடகு பிடித்தல், கடனட்டைகள் மற்றும் வரவு அட்டைகள் ஆகியவை திகழ்வதுடன், இவற்றுள் அதிகமானவை உள்ளார்ந்தமான வெகுமதி வழங்கல் ஏற்பாடுகளை தன்னகத்தே கொண்டவையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டமானது வெகுமதி வழங்கல் நடைமுறையினை புதியதொரு மட்டத்திற்கு உயர்த்தும் அதேநேரம், வழக்கமாக வழங்கப்படுவதை விடவும் அதிகமான பரிசுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. மாதாந்தோறும் தெரிவு செய்யப்படும் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியான பரிசுகளை வழங்குவதற்கு மேலதிகமாக, மாதாந்தம் கிளைகள் தோறும் 20 வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் பரிசுகளை வழங்குவதற்கும் இத்திட்டம் உத்தரவாதம் அளிக்கின்றது. இதற்கமைய ஒரு மாதத்தில் மொத்தமாக 2620 பேர் வெற்றியாளராகும் வாய்ப்பு கிடைக்கின்றது. 6 மாதங்களுக்கு முன்னெடுக்கப்படுகின்ற இந்த வெகுமதி வழங்கல் திட்டத்தின் இறுதியில் நடைபெறும் மாபெரும் சீட்டிழுப்பின் மூலம் இறுதி வெற்றியாளராக தெரிவு செய்யப்படும் அதிர்ஷ்டசாலியான நபர், ரூபா 15 மில்லியன் பெறுமதியான அதிசொகுசு வீடொன்றை பரிசாக தட்டிச் செல்வார். செலான் வங்கியின் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரத்ன கூறுகையில், “இவ்வெகுமதி வழங்கல் திட்டத்தின் இறுதி சீட்டிழுப்பினை நாம் நெருங்கிக் கொண்டிருப்பதால், மனக் கிளர்ச்சியும் பரபரப்பும் அதிகரித்துள்ளது. இத்திட்டம் குறித்து மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களிடையே உன்னதமான ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதை, எமது உறுதியான வலையமைப்பில் இயங்கும் 137 கிளைகளிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள அறிக்கைகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. பல்வகைப்பட்ட எமது வாடிக்கையாளர்கள் அனைவரினதும் வாழ்க்கையில் இவ்வகையான மாற்றம் ஒன்றினை நிகழ்த்துவதற்கு முடிந்ததையிட்டு உண்மையிலேயே நாம் மனமகிழ்ச்சி அடைகின்றோம். பெருமளவிலான மக்களை சென்றடையும் விதத்தில் புவியியல் அடிப்படையிலான எல்லைகளையும் கடந்து, தான் வகித்துவரும் தேசிய முக்கியத்துவமிக்க பாத்திரம் குறித்து செலான் வங்கி மிகுந்த அக்கறையுடன் செயற்படுகின்றது. 'அன்புடன் அரவணைக்கும' பழம்பெரும் வங்கியாக திகழும் செலான் வங்கியைச் சேர்ந்த நாம், இந்த நாடு முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பினை எப்போதும் உறுதிமிக்கதாக உணர்கின்றோம்" என்று தெரிவித்தார் |
திங்கள், 30 ஜூலை, 2012
செலான் வங்கியின் 'பரிசு மேல் பரிசு' வெகுமதி சீட்டிழுப்பின் ஐந்தாவது கோடீஸ்வரராக நுகேகொடை வாடிக்கையாளர் தெரிவு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக