மேலும், மிகவும் ஆழமான நீரடிப்பு பகுதியில் சுழியோடல் சான்றிதழ் இல்லாத நிலையிலும் நீச்சல் காரர் நீரடிப்பகுதியை சென்று பார்த்து அனுபவிப்பதற்கு ஒரு நல்வாய்ப்பினை ஸ்நுபா வழங்குகிறது. சரியான முறையில் மேற்கொள்ளப்படும் ஒரு ஸ்நூபா சுழியோட்டமானது பெருமளவு நீர்வாழ் உயிரினங்களை தரிசிக்கத்தக்கதான சுமார் ஆறு மீற்றர்கள் வரையான ஆழத்திற்கு செல்வதற்கு துணைபுரிகிறது.
“திருகோணமலை, புறாத்தீவு (Pigeon Island) இடங்கள் பெருந்தொகையான, பல வர்ணங்கள் கொண்ட கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதனால் நீச்சல் காரர்கள் திகைப்பூட்டும் பல அனுபவங்களைப் பெறும் வாய்ப்பு உள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறை வளர்ச்சி கண்டுவரும் இவ் வேளையில் மங்கூஸ் அட்வெஞ்சர்ஸ் அமைப்பு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஸ்நுபா போன்ற பரபரப்பூட்டும் செயற்பாடுகளை ஏற்படுத்தி வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளது." இவ்வாறு தெரிவிக்கிறார் ஸ்நுபா ஏற்பாட்டாளரான மங்கூஸ் அதிபர் நிஷான் சில்வா.
ஸ்நுபா ஆனது ஸ்கியூபா சுழியோட்டத் தினையும் Snorkling ஐயும் இனைத்து செயற்படுத்துவதால் நீச்சல் தெரிந்திருக்கும் எவருக்கும் இது மிகவும் இலகுவானதும் பாதுகாப்பானதும் ஆகும். ஸ்நுபா விளையாட்டு ஸ்கியூபா விளையாட்டில் பயன்படும் சாதனங்கள் பலவற்றை பயன்படுத்தும் அதே வேளை ஒட்சிசன் தாங்கியை மட்டும் தனியாக மிதக்கவிடுகிறது. ஸ்கியூபாவில் அதனை முதுகுப்புறத்தில் வைப்பதுண்டு. ஒரு ரியூப் மூலமும் சீராக்கி மூலமும் நீச்சல் காரருடன் இது இணைக்கப்பட்டிருக்கும். இதனை பொருத்தி அறிமுகப் படுத்தியும், செயற்படுத்தியும் 15 நிமிடங்களின் பின்னரேயே இவர்கள் நீருக்கடியில் செல்வதற்கு விடப்படுகின்றார்கள்.
மங்கூஸ் அட்வெஞ்சர்ஸ் அமைப்பே இவ்வாண்டின் தொடக்கத்தில் ஸ்நுபாவை ஹிக்கடுவவிலுள்ள Chaya Tranz பகுதியில் தொடக்கி வைத்ததன் மூலம் தென்னாசிய பிராந்தியத்திற்கே அறிமுகம் செய்துள்ளது. இலங்கையை வீரதர விளையாட்டுக்களின் ஒரு மையமாக பிரபலப்படுத்தும் ஒரு நோக்கில் இதனை இப்பொழுது திருகோணமலைக்கு விரிவாக்கியுள்ளது.
“இலங்கை வீரவிளையாட்டுக்கள் செழித்து வளர்வதற்கான வாய்ப்புகள், பரப்பெல்லை, சுவாத்தியம் என்பனவற்றை கொண்டுள்ளது. கடல், தரை, வான் சார்ந்த பல்வெறு விளையாட்டு வகைகளை அறிமுகம் செய்து இலங்கையை மென்மேலும் சுற்றுலாப் பயணிகள் விரும்பும் ஒரு நாடாக மாற்றுவதை நாம் நோக்கான கொண்டுள்ளோம். விளையாட்டு வகைகள் பலவற்றை ஏற்படுத்தித்தருவதனால் பயணிகள் அதிககாலம் இங்கு தங்கியிருப்பார்". இவ்வாறு அவர் தெரிவிக்கிறார்.
இருபது ஆண்டுகளுக்கு முன் ஸ்நுபா சுழியோட்ட விளையாட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து உலகின் பல பாகங்களிலிருமிருந்து சுமார் ஐந்து மில்லியன் பேர்கள் இங்கு வந்து ஸ்நுபா விளையாட்டுகளில் பங்குபற்றியுள்ளனர். ஆயினும் இது தொடர்பில் மோசமான ஏதேனும் காயங்கள் ஏற்பட்டதாக இது வரை முறைப்பாடுகள் ஏதுமில்லை. இதனை இலகுவாக செயற்படுத்த முடிவதும் பாதுகாப்பு தொடர்பில் நம்பிக்கையூட்டும் முன் வரலாறும் ஸ்நுபாவை மிகுவளர்ச்சி கண்டு வரும் நீர் விளையாட்டாக முன்நிறுத்துகிறது.
0 comments:
கருத்துரையிடுக