siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 22 ஜூலை, 2012

கண்டி சிறை முஸ்லிம் கைதிகளுக்கு கஞ்சி, பேரீச்சம்பழம் இலவசமாக வழங்கப்படும்

22.07.2012 கண்டியிலுள்ள சிறைச்சாலைகளில் நோன்பு நோற்கும் முஸ்லிம் சிறைக்கைதிகளுக்கு நோன்பு திறப்பதற்காக கஞ்சி, பேரீச்சபழம் என்பனவற்றை வழங்க சிறைச்சாலைகளுக்கு அருகிலுள்ள பள்ளி வாசல்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

கடந்த வருடங்களைப் போலவே இவ்வருடமும் கஞ்சி, பேரீச்சம் பழங்களை வழங்க பள்ளி வாசல்களின் நிர்வாக சபைகள் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிருவாகச் சபையினர் தெரிவித்தனர்.

குறிப்பாக கண்டி போகம்பறை சிறைச்சாலையிலுள்ள முஸ்லிம் கைதிகளுக்கு கண்டி மத்திய சந்தைக் கருகிலுள்ள பள்ளிவாசல் இராஜ வீதியிலுள்ள சிறைச்சாலை முஸ்லிம் கைதிகளுக்கு இராஜவீதி தைக்கா பள்ளி வாசலுடனும் பல்லேகல திறந்தவெளிச் சிறைச்சாலை முஸ்லிம் கைதிகளுக்கு தென்னக்கும்புர பள்ளிவாசலும் இவ்வாறு நோன்பு திறப்பதற்கான கஞ்சி, பேரீச்சம்பழம் என்பனவற்றை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

0 comments:

கருத்துரையிடுக