அமெரிக்க
பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிசூட்டில் 28 பேர் உயிரிழந்த நிலையில்,
துப்பாக்கி சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் என ஜனாதிபதி ஒபாமாவுக்கு பல்வேறு
தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கனெக்டிகட் மாகாணம் நியூடவுன் பகுதியில் உள்ள சான்டி ஹூக் தொடக்கபள்ளியில், ஆடம்
லான்சா என்பவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர்
பலியாயினர். பின்னர் அந்த நபரும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். பள்ளி மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து லான்சாவின் தந்தை மற்றும் மூத்த சகோதரரிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜனாதிபதி பராக் ஒபாமா, கண்ணீர் மல்க தொலைக்காட்சிக்கு நேரடி பேட்டி கொடுத்தார். இதற்கிடையே வெள்ளை மாளிகைக்கு ஓன்லைன் மூலம் ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தடுக்கும் வகையில், கடும் கட்டுப்பாடுகளுடன் துப்பாக்கி சட்டத்தைத் திருத்தி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு அனுப்பப்பட்ட இதில் 43,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இதுகுறித்து நியூயார்க் நகர மேயர் மைக்கேல் புளூம்பெர்க், துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்த போதிலும், குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவம் நிகழும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்த பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு குறித்த ஜனாதிபதி ஒபாமாவின் இரங்கல் செய்தி மட்டும் போதுமானது அல்ல. இதுபோன்ற சம்பவங்கள், விர்ஜினியா டெக், அரோரா மற்றும் விஸ்கான்சின் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ள நிலையில், கடுமையான கட்டுப்பாடுகளுடன் துப்பாக்கிச் சட்டத்தை உடனடியாக திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் |
ஞாயிறு, 16 டிசம்பர், 2012
துப்பாக்கி சட்டத்தை கடுமையாக்க வேண்டும்: ஒபாமாவுக்கு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக