அமெரிக்க மருந்து
நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்த இந்தியருக்கு 6 மாத சிறை தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ரோடி தீவில் வசிப்பவர் ஷானீல்
ஜெயின்(வயது 56). இவருக்கும், அமெரிக்க இராணுவத்திற்கு மருந்துகள் தயாரித்து வழங்கும் இசட்-மெடிக்கா என்ற நிறுவனத்திற்கும் இடையே மோதல் இருந்தது. இந்தியா வந்த ஜெயின், அங்கிருந்தவாறு அமெரிக்காவில் உள்ள இசட்-மெடிக்கா நிறுவனத்திற்கு பல முறை போன் செய்து மிரட்டியுள்ளார். தான் தீவிரவாதி எனவும், அந்த மருந்து நிறுவனத்தை, குண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும், இந்தியாவில் அமெரிக்க சட்டங்கள் செல்லுபடியாகாது எனவும் கூறி மிரட்டியுள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட அமெரிக்க பொலிசார் ஷானீல் ஜெயினை கைது செய்தனர். பின் ஜெயின் ஜாமினில் விடுவிக்கப்பட்டு, நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீவிரவாதி என தெரிவித்து மிரட்டல் விடுத்த ஜெயினுக்கு, 6 மாத சிறை தண்டனையும், 6 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து கனெக்டிகட் மாவட்ட நீதிபதி டேவிட் பென் உத்தரவிட்டார். |
ஞாயிறு, 16 டிசம்பர், 2012
போனில் மிரட்டிய தீவிரவாதிக்கு சிறைத்தண்டனை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக