
பிரித்தானிய கிழக்கு சசக்ஸ் பகுதியிலுள்ள கேம்பர் சாண்ட்ஸ் கடற்கரையில் உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடற்கரை பகுதியில் ஐந்து இலங்கைத் தமிழ் இளைஞர்கள் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன் கிழமை குறித்த கடற்கரைக்குச் சென்ற கெனூஜன் சத்தியநாதன், கோபிகாந்தன் சத்தியநாதன், நிதர்சன் ரவி, இந்துஷன் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் குருசாந்த் ஸ்ரீதவராஜா ஆகியோர் புதைமணலில்...