வட்பேட்(Watford -UK) நகரில் வாழ்ந்து வந்த சூரிக்கு 81 வயது ஆகிறது. அவர் தனது மனைவி காஞ்சனாவுடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மாதம் அவரையும் கொரோனா தாக்கியது. இதனால் அவர் பாதிக்கப்பட்டு, வட்பேட்டில் உள்ள வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவரை சில நாட்கள் மட்டுமே பராமரித்த மருத்துவர்கள்.கடந்த 26-04-20ம் திகதி அவரது மகன் ராஜ்ஜை அழைத்து, உங்கள் தந்தைக்கு வெண்டிலேட்டர் பொருத்த முடியாது. அவரது நுரையீரல் தாங்காது. எனவே அவரை வீட்டுக்கு
அழைத்து செல்வது என்றால், நீங்கள் கூட்டிச் செல்லலாம் என்று கூறியுள்ளார்கள். (மறைமுகமாக அவர் இறக்கப் போகிறார் என்பதனை தெரிவித்துள்ளார்கள்.)
இதேவேளை வட்பேட் மருத்துவமனையில் உள்ள முன்னணி, மருத்துவ ஆலோசகர் ஒருவர் உங்கள் தந்தையை 95,5 % விகிதம் காப்பாற்றுவது கடினம் என்றும். அவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்து போன குடும்பம். இறுதி நாட்களில் ஆவது வீட்டில் தங்கி இருக்கட்டும் என்று
அழைத்துச் செல்ல தீர்மானித்தார்கள். ஆனால் மகன் ராஜ் வேறு ஒரு திட்டத்தை செயல்படுத்த ஆயத்தமானார்.
அவர் அப்பாவை ஜமனின் கைகளில் தாரைவார்த்து கொடுக்க தயாராக இல்லை. எப்படி என்றாலும், அப்பாவை காப்பாற்ற வேண்டும் என்று சபதம் பூண்டார்.முதலில் ராஜ், வீட்டை சுத்தம் செய்து அப்பாவுக்கு என்று ஒரு
அறையை ஏற்பாடு செய்தார். வீட்டிற்கு
வெளி ஆட்கள் வருவதை தடை செய்து முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அப்பாவை 24 மணி நேரமும் கவனிக்க google spreed sheet பாவிக்க ஆரம்பித்தார். அனைத்து விடையங்களையும் அதில் போட்டு ஷியார் செய்தார். தொடர்ந்து அழுத்தம் கொடுத்து,
சீராக காற்றை வைத்திருக்கும் இயந்திரத்தை (continuous positive airway pressure) வீட்டிற்கு கொண்டு வந்தார்.
அப்பாவை படுக்கவைத்து அதனை முகத்தில் மாட்டி விட்டார். தொடர்சியாக கவனித்து, தேவையான மருந்துகளை கொடுத்தும் வந்தார். அனைத்து குடும்பத்தினரும், நேரத்தை பங்கு போட்டு அப்பாவை கவனித்து கொண்டார்கள்.ஏப்பிரல் மாதம் 26 அன்று பிழைக்க மாட்டார் என்று வைத்தியசாலையால்
திருப்பி அனுப்பப்பட்ட சூரி, நேற்று எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டார். ஆம் 81 வயதில் மேலதிக சில நோய்களால் ஏற்கனவே அவர் பீடிக்கப்பட்டு இருந்தார். ஆனால், கொரோனாவில் இருந்து அவர் முற்று முழுதாக மீண்டு விட்டார் என்று நேற்று குடும்பத்தார் அறிவித்துள்ளார்கள். மன
வலிமையும் விடா முயற்ச்சியும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சமும் இருந்தால், இன் நோய் தாக்கத்தில் இருந்து விடுபட முடியும் என்று, இந்த முதியவர் எமக்கு ஒரு மன தைரியத்தை ஏற்படுத்தி
இருக்கிறார் இன்று.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>