
ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில் சுமார் 5 ஆண்டுக்காலம் வைக்கப்பட்டிருந்த நிலையினால் இன்றும் மன நலச் சிக்கல்களுக்கு ஆளாகி வருவதாக ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள ஈரானிய அகதி Payam Saadat தெரிவித்திருக்கிறார். இதனால் சுரங்கப்பாதைத் தோண்டி தடுப்பிலிருந்து தப்பிக்க அவரும் பிற அகதிகளும் முயன்றிருந்தாக நீதிமன்றத்திடம் அவர் தெரிவித்திருக்கிறார். இவர்கள் சுரங்கப்பாதைத் தோண்டியது பின்னர் கண்டறியப்பட்ட போதிலும், அதற்கு முன்னதாக 4...