siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 21 ஜூலை, 2012

மனைவியின் நினைவாக இதய வடிவில் மலர் தோட்டம் அமைத்த முதியவர்

21.07.2012
காதல் மனைவி மும்தாஜ் நினைவாக பேரரசர் ஷாஜகான் ஆக்ராவில் தாஜ்மகால் அமைத்தார். இது இன்றளவும் உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது.
ஆனால் இது போன்ற பிரமாண்ட சாதனையை சாதாரண மனிதர்களால் உருவாக்க இயலாது. இருந்தபோதிலும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வின்ஸ்டன் ஹோவிஸ் (வயது 70) என்ற விவசாயி தனது மனைவி ஜேனட் நினைவாக இருதயம் வடிவில் மலர் தோட்டம் ஒன்றை அமைக்கிறார்.
இதற்காக 6 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து ஆயிரக்கணக்கான மரங்களுக்கு மத்தியில் நறுமணம் வீசும் வெள்ளைநிற பூச்செடிகளை வளர்த்து வருகிறார். 70 வயதிலும் மனம் தளராமல் வின்ஸ்டன் இந்த பணியை அவரே செய்து வருகிறார்.








0 comments:

கருத்துரையிடுக