கம்போடிய மன்னரின் தந்தையும், முன்னாள் மன்னருமான நரோத்தம் சிகானுக் (90) சீனாவில் காலமானார்.
திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அவர் உயிரிழந்ததாக, கம்போடிய அரசு தெரிவித்துள்ளது.
சிகானுக் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்காக, சீனாவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
மக்களின் அன்பையும், பெருமதிப்பையும் பெற்ற முன்னாள் மன்னர் நரோத்தம் சிகானுக்கின் உடலை கம்போடியாவுக்குக் கொண்டு வர, அவரின் மகனும் தற்போதைய மன்னருமான நரோத்தம் சிகாமணி சீனா விரைந்துள்ளார் என்று கம்போடிய துணைப் பிரதமர் நிக்புன்ச்சேய் தெரிவித்துள்ளார்.
1922ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி பிறந்த நரோத்தம் சிகானுக், 1941 முதல் 1955ஆம் ஆண்டு வரையும் பின்னர் 1993 முதல் அக்டோபர் 2004ஆம் ஆண்டு வரையும் மன்னராகப் பொறுப்பு வகித்தார்.