siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 2 நவம்பர், 2012

10 மாத கர்ப்ப காலத்தில் சந்தோஷமா இருக்கணுமா?


 

Friday 02 November 2012 By.Rajah.கர்ப்ப காலம் பத்து மாதம்தான்... ஆனா, தாய்மை என்ற உறவு, காலம் முழுதும் இருக்க கூடியது... அந்த உறவை பெற கர்ப்ப காலத்தில் இருந்தே பெண்கள் தங்களை பாதுகாப்பது அவசியம் என்கிறார் ராக்கி கபூர். இவர், ஆழ்வார்பேட்டையில் ‘த்வி மெட்டர்னிடி ஸ்டூடியோ‘ என்ற கர்ப்பிணிகளுக்கான உடற்பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இதோ அவரது பேட்டி...
என் கர்ப்ப காலத்தில் சந்தித்த பிரச்னைகள்தான் இந்த பயிற்சி மையத்தை ஆரம்பிக்க தூண்டியது. குழந்தைபேறு குறித்த கவுன்சிலிங் படிப்பை படித்து இருந்தாலும் என் கர்ப்பகாலத்தில் பல பிரச்னைகளை சந்தித்தேன். உடல் நலம் நன்றாக இருந்த போதும், சில மருத்துவ பிரச்னைகள் என் கர்ப்பகாலத்தை சிக்கலாக்கியது. நான் பட்ட அவஸ்தைகள் மற்ற பெண்களும் படக்கூடாது என்பது தான் இந்த பயிற்சி மையத்தின் முக்கிய நோக்கம்.
உடற்பயிற்சி என்றதும் ஏரோபிக்ஸ் மற்றும் ஜிம்மில் செய்வது போல் இருக்கும் என்று பல பெண்கள் நினைக்கிறார்கள். இது அப்படி இல்லை. குழந்தை கருவில் உருவான நாள் முதல் அது வெளியே வரும் வரை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும், பத்து மாத காலத்தை எவ்வாறு சந்தோஷமாக கழிக்க வேண்டும் என்பதற்கான பயிற்சி மட்டுமே இங்கு சொல்லித் தருகிறோம்.
கர்ப்பகாலத்தில் பல பெண்களுக்கு முதுகுவலி, மனச் சோர்வு, மனஉளைச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். சில பெண்கள் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடல் பருமன் ஏற்பட்டு அதனாலும் பல பிரச்னைகளை சந்திப்பார்கள். கர்ப்பகாலத்தில் சமச்சீரான உணவுகளை சாப்பிடுவது அவசியம். அதே சமயம் சிறிய உடற்பயிற்சிகளும் செய்யலாம்.
உடல் எடை சீராகவும், ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். முதன் முதலில் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு குழப்பங்கள் இருக்கும்.  அந்தக் குழப்பங்களை போக்கி ஒரு தெளிவான பாதையை காட்டுகிறோம்.
இங்கு முக்கிய பயிற்சி மூச்சு பயிற்சி.
குழந்தையின் எடையை கால் தாங்குவதால், கால் தசைகள், வயிற்று பகுதி, இடுப்பு மற்றும் பெல்விக் தசைகள் வலுவாக்கும் பயிற்சியும் அளிக்கிறோம். மேலும் குழந்தைகளை கையாளும் முறை குறித்து கணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். குழந்தையை வசதியாக எப்படி தூக்குவது, உடை மாற்றுவது, அவசர கால நடவடிக்கைகள் எல்லாவற்றையும் ஆண்களுக்கும் சொல்லித் தருகிறோம். இவ்வாறு கூறினார் ராக்கி கபூர்

0 comments:

கருத்துரையிடுக