ஆப்கானிஸ்தானில்
கடந்த 2 நாட்களில் மட்டும் 14 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு பிறகு அதாவது 2001ஆம் ஆண்டிலிருந்து
தூக்கு தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படவில்லை. ஆனால் கடந்த 2 நாட்களில் மட்டும் 14 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கற்பழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் போன்றவற்றிற்காக தூக்கிலிடப்பட்டதாக அரசு கூறியுள்ளது. மேலும் அங்கு இன்னும் 250 தூக்கு தண்டனை கைதிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செயலுக்கு மனித உரிமை அமைப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். |
வியாழன், 22 நவம்பர், 2012
ஆப்கானில் 14 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக