பிரிட்டன் ராணி
இரண்டாம் எலிசபெத் அமைச்சரை கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு, சாதனை படைத்தார்.
பிரிட்டன் அரசர்கள் மிக முக்கியமான காலகட்டத்தில் மட்டுமே அமைச்சரவை கூட்டத்தில்
கலந்து கொள்வர். இந்நிலையில் இரண்டாம் எலிசபெத், லண்டனில் டவுனிங் தெருவில் அமைந்துள்ள பிரதமர் டேவிட் கமரூன் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். பிரதமருடைய இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் விவாதித்தார். எலிசபெத் அரியணை ஏறிய வைர விழாவையொட்டி நடந்த கொண்டாட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட்டது. மேலும் அமைச்சர்கள் சிலர் அரசிக்கு அன்பளிப்புகளை வழங்கினர். பிரிட்டிஷ் அமைச்சரவை கூட்டத்தில் எலிசபெத் அரசி கலந்து கொண்டது ஒரு வரலாற்று நிகழ்வாக கருதப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது எலிசபெத்தின் தந்தை நான்காவது ஜார்ஜ் மன்னர் பிரிட்டிஷ் அமைச்சரவையை கூட்டி விவாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |
புதன், 19 டிசம்பர், 2012
அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று சாதனை படைத்தார் ராணி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக