siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 12 டிசம்பர், 2012

புதிய குடிவரவாளர்களை உள்வாங்கும் விடயத்தில் ஆறாவது இடத்தில் கனடா

பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பில் அங்கம் வகிக்கும் 34 நாடுகளில் கனடா புதிய குடிவரவாளர்களை வரவேற்பதில் ஆறாம் இடத்தில் இருப்பதாக அறிக்கையொன்று தெரிவிக்கிறது. பாரிஸ் நகரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பில் அங்கம் வகிக்கும் 34 நாடுகளில் பெரும்பான்மையானவை வளர்ச்சியடைந்த நாடுகளாகும்.
இந்த நாடுகளில் புதிய குடிவரவாளர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை வைத்து இந்தக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
கனடாவின் மக்கள் தொகையில் 20 சதவீதமானவர்கள் வெளிநாடுகளில் பிறந்தவர்களாகவும். இவர்களில் 18 வீதமானோர் கடந்த ஐந்து வருட காலத்திற்குள் வந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
மற்றைய அங்கத்துவ நாடுகளில் இத்தொகை 22 வீதமாக உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவிற்கு வருகை தந்த புதிய குடிவரவாளர்களில் 54 சதவீதம் பேர் பட்டதாரிக் கல்வி கற்றவர்களாகவும் மற்றைய அங்கத்துவ நாடுகளில் சராசரி 31 விழுக்காட்டினர் பட்டதாரிக் கல்வி கற்றவர்களாகவும் இருக்கின்றனர்.
2010ம் ஆண்டில் கனடா ஐந்தாவது இடத்தில் இருந்ததும் 2012ல் குடிவரவாளர்கள் தொகையில் கணிசமான முன்னேற்றமேற்படாத காரணத்தால் அது ஆறாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதையும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன

0 comments:

கருத்துரையிடுக